4 Nov 2010

நான்காண்டு நட்புக்காலம்


நண்பா...!
நாம் கைகோர்த்து
நடந்த பாதைகளில்-இன்று
நட்பின் சுவடுகள்.....

சமாதானாமாவதற்க்காகவே
நாம் போட்ட
சின்ன சண்டைகளும்,
நான்காண்டுகள்
நம்மை சுமந்த
நான்காவது பெஞ்சும்
இன்றும்
என் மனத்திற்குள்...

எந்த இறப்புக்கும்
இத்தனை துளி
கண்ணீர் துளிகளை
சிந்தியதில்லை
என் கண்கள்...

இப்போதுதான் தெரிகிறது...!
மரணத்தைவிடவும்
இந்த பிரிவு
கொடியது என்று...

இரு உதடுகளாய்
நாம் இருந்து,
நாம் பிரிந்தால்தான்
வார்த்தையென்றால்
நான் ஆயுள் முழுவதும்
ஊமையாக வாழ்ந்திருப்பேன்.....

இரு இமைகளாய்
நாம் இருந்து
இப்போது பிரிவதென்றால்
நான் ஆயுள் முழுவதும்
இருட்டிலே கிடந்திருப்பேன்...

ஆனால்
நமக்குள் இருப்பதோ
ஒற்றை உயிரல்லவா....!

இந்த கவிதையில்
கலந்து கிடப்பது
கவலைகள் மட்டுமல்ல...!!
காய்ந்து போன-என்
கண்ணீர் துளிகளும் தான்...

இப்போது நாம்
பிரிந்தாலும்
இன்னும்
அடுத்ததாய் ஒரு
ஆயிரம் கோடி
ஆண்டுகளுக்கு
நான் உன் இதயத்திலும்
நீ என் இதயத்திலுமாய்
வாழ்ந்து கொண்டிருப்போம்...!
நினைவுகளாய் அல்ல...!!
நிஜங்களாய்...
நட்பின் நிஜங்களாய்....

-----அனீஷ்...
SHARE THIS

3 comments:

  1. good immotions of true friendship v good poem on friendship

    ReplyDelete
  2. wah! wah! what a nice kavitai! great anishh

    ReplyDelete