24 Nov 2010

உனக்குள் கரைகிறேன் நான்


என் விரல் தீண்டி
உன் விரதம் கலைக்கவா...?
என் எல்லையை தாண்டி
உன் வெட்கம் உடைக்கவா...??

உன் கூந்தலிலே - நான்
கூரை நெய்யவா...?
விடியும்வரை அதில் நான்
குடியிருக்கவா...??

உன் உதட்டோரம்
நான் பசி தொலைக்கவா...?
உன் உயிருக்குள்
நான் கசிந்து கரையவா...??

உன் நெஞ்சுக்கு
நான் மஞ்சமாகவா...?
உச்சம் தொடும்வரை - நான்
அதில் தஞ்சம் கொள்ளவா...?

உன் இடையோரம்
நான் விடை காணவா...?
தடையேதும் இல்லாமல் - நான்
உனை மேயவா...??

மேகமாய் உனக்குள் நான்
மோகம் வளர்க்கவா...?
முத்த மழையில் உன்னை நான்
மொத்தம் நனைக்கவா...??

----அனீஷ் ஜெ...

SHARE THIS

15 comments:

  1. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    ReplyDelete
  2. anishhhhh.... nt bad :)

    ReplyDelete
  3. so romantic......... well written:)

    ReplyDelete
  4. kavithai ki ternda picture romba azhaga eruku

    ReplyDelete
  5. nice!!! u can write lyrics in tamil movies. try for that

    ReplyDelete
  6. அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. please change image. kavithai super iurkunga. but image sari illaga. please accept my request.

    ReplyDelete
  8. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கன்மணி. இந்த கவிதைக்கும், அதன் தலைப்பிற்கும் இதுவே பொருத்தமான படம் என நான் நினைக்கிறேன். இனிவரும் காலங்களில் அனைவரும் விரும்பும்படியான படங்கள் பயன்படுத்தப்படும். உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி கன்மணி...!!!

    ReplyDelete
  9. sema Romantica eluthirukeenga Anish...
    very nice...
    Kalakureenga...!

    ReplyDelete
  10. :) Smitha
    :) Gayathri
    :) anishka nathan
    :) Karthick
    :) தமிழ்த்தோட்டம்
    :) kanmani
    :) minu
    :) Kaavya

    அனைவருக்கும் ரொம்ப நன்றி...!!

    ReplyDelete
  11. eppadi ippadi ellam eluthuringa.. romba romance.. padikum poluthu namakum oru lover illaiye nu yenga vaikiringa.. marriage life avalu suvarasiyamo..

    ReplyDelete
  12. மிக்க நன்றி

    ReplyDelete