17 Dec 2010

ஒரு துளி கண்ணீர்


சுவாசமாய் என் உயிருக்குள்,
சுடராய் என் இதயத்தில்
எரிந்தவள் நீ...!

என் கவிதைகளுக்கும்,
உன் மவுனங்களில்
வார்த்தைகளை தந்தவள் நீ...!

இன்று ஏனடி நீ
என் இதயத்தை
சில்லாய் நொறுக்கிப்போகிறாய்...?

உயிருக்குள்
உனை வைத்தேன்...!
நீ ஏனடி - என் உயிரை
முள்ளாய் தைக்கிறாய்...?

என் கண்ணீரை - நீ
துடைப்பாய் என்றிருந்தேன்...!
நீ ஏனடி
என் கண்ணீர் மழை கண்டு
குடை பிடிக்கிறாய்...!!

என் வலிகளுக்கு கூட
நீதான் அழுதிருக்கிறாய்...!
இன்று நானோ அழுகிறேன்...!!
உன் இதயம் வலிக்கவில்லையா...?

என் உணர்வுகளும்,
நான் கொண்ட காதலும்
நீ விளையாடும்
பொம்மையானது ஏனோ...?
உன் காதல் - வெறும்
பொய் தானோ...?

காதல் பாஷை
கற்றுத் தந்தாய்...!
காற்றின் ஓசையிலும்
காதல் இசை மீட்டிச்சென்றாய்...!!
அவை கூட வெறும்
பொய் வேஷம் தானோ...?

நான் தூங்க
உன் இமை கேட்டேன்...!
நான் வாழ - உன்
இதயம் கேட்டேன்...!!
மறுத்திருந்தால் கூட
மன்னித்திருப்பேன்...!!!

ஆனால் நீயோ
தந்துவிட்டு ஏனடி
திருப்பிக்கேட்கிறாய்...?
பாதி பயணத்தில் ஏனடி
திரும்பிப்போகிறாய்...?

இப்போதோ உன்னை
மன்னிக்க மறுக்கிறதுதடி - என்
மனது...!

உடைப்பதுதான்
உனக்கு பிடிக்குமா...?
என் இதயமும்,
உன் சத்தியங்களும்
சில்லாய் சிதறி கிடக்கின்றன...!

பொய் காரணங்கள்
போதுமடி எனக்கு...!
மனமிருந்தால் இங்கு
மாற்கங்களும் உண்டு...!!

என் காதலை தவிர
என்னிடம் எதுவுமில்லை...!
உன்னிடம் தர...
இதனால்தான்
இப்போது விலகி செல்கிறாயா...?

இரக்கமில்லாதவளா நீ...?

நீ என்னை
ஏமாற்றவில்லை...!
நான் தான் உன்னிடம்
ஏமாந்து போனேன்...!!

உன்
வார்த்தை காதலால்
வலிபட்டு நிற்கிறேன்...!

வார்த்தையில் இல்லையடி காதல்...!
காதலுக்காய்
வாழ்ந்துகாட்டுவதில்தான்
வாழ்கிறது உண்மை காதல்...!!

தவறுகளை கூட
மன்னித்துவிடலாம்...!
ஆனால் பாவங்கள்
தண்டிக்கப்பட வேண்டும்...!!

என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...

-----அனீஷ்...

 
SHARE THIS

20 comments:

  1. சபாஷ் .............வார்த்தையில் இல்லையடி காதல் காதலுக்காய் வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கிறது காதல். அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமை வரிகள்
    பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
  3. அருமையான வரிகள்

    ReplyDelete
  4. nice anish. itu matri girls-ale tan ele girls-kum ketta per vardu. :(

    ReplyDelete
  5. வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம், சொல்ல வார்த்தைகள் இல்லை, படித்து ருசிக்கிறேன், ருசித்ததை ரசிக்கப் போனால் வலிக்கிறது உள்ளம்.

    ReplyDelete
  6. wow very nice dear :)

    ReplyDelete
  7. Kowsy

    காதலித்தவளைத் தண்டிக்கலாமா அனீஷ். ஆனால், காதலித்துப் பார்க்க வேண்டும் என்கிறீர்களா?.
    அற்புதமான கவிதை

    kowsy2010.blogspot.com

    ReplyDelete
  8. @சந்திரகெளரி....

    இந்த கவிதையில், காதலன் தான் காதலித்தவளை தண்டிப்பதாய் நான் குறிப்பிடவில்லை. எதிர்காலம் ஏதோ ஒரு வகையில் அவளை தண்டிக்கும் என்றே குறிப்பிட்டுள்ளேன்...

    //என்றாவது ஒருநாள்
    என் நினைவுகள்
    உன் இதயத்தில் வரும்போது
    உன் கண்கள் சிந்தும்
    அந்த ஒருதுளி
    கண்ணீர் துளியும்
    உனக்கு தண்டனையே...//

    உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. கலக்கிடீங்க தலைவா

    ReplyDelete
  10. அனைவருக்கும் மிக்க நன்றி...!!!

    ReplyDelete
  11. anda naal kadali ku vara kudadu

    ReplyDelete
  12. @anishka nathan: எந்த நாள் வர கூடாது?
    அவள் அவனை ஏமாற்றிவிட்டு சென்றால், கண்டிப்பாக “அந்த” நாள் வரும்...! ஒருவேளை தினமும் அந்த நாளாக கூடாக அமையலாம்..! அது அவளுக்கு மிகப்பெரிய தண்டனையே என்பதில் துளியும் சந்தேகமில்லை...!!!

    ReplyDelete
  13. ARUL : நான் என் வாழ்வில் அனுபவிக்கும் வேதனை இங்கு உங்கள் கவிதை மூலம் உனர்கிறேன்

    ReplyDelete
  14. @ARUL: ஹ்ம்ம்ம்ம்.... நீங்கள் அனுபவிக்கும் வேதனைகள் எல்லாம் நீங்கி, வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.. கருத்துக்கு மிக்க நன்றி...!!

    ReplyDelete
  15. Very nice Kavithai Anish...
    Kalakureenga...!
    :) :) :)

    ReplyDelete
  16. @Kaavya : ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  17. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  18. @அம்பாளடியாள்: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! மீண்டும் வருக...!! :)

    ReplyDelete
  19. இப்படியும் கவிதை எழுதலாம் என்று சொல்லுரிங்க ?

    KAVITHAI SUPER

    BY

    LIVINA

    ReplyDelete