28 Nov 2010

அம்மா...

அம்மா...


உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!
அம்மா என்று நான் அழைத்ததே
எனக்கு முதல் பேச்சாசானது...!!

நீ ஊட்டிய சோறே
எனக்கு அமுதமானது...!
நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!

நான் சிரித்தால்
நீ சிரிக்கின்றாய்...!
நான் அழுதால்
நீயும் அழுகின்றாய்...!!
பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ...

உயிர் தந்தவள் நீ...!
உடன் வருபவள் நீ...!!
கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!

உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!

உன் மடி மீது
கொஞ்சம் தலைசாய்த்தால்
வலிகள் கூட
சுகமாக மாறும்...!

இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...

-----அனீஷ்...

24 Nov 2010

உனக்குள் கரைகிறேன் நான்

உனக்குள் கரைகிறேன் நான்


என் விரல் தீண்டி
உன் விரதம் கலைக்கவா...?
என் எல்லையை தாண்டி
உன் வெட்கம் உடைக்கவா...??

உன் கூந்தலிலே - நான்
கூரை நெய்யவா...?
விடியும்வரை அதில் நான்
குடியிருக்கவா...??

உன் உதட்டோரம்
நான் பசி தொலைக்கவா...?
உன் உயிருக்குள்
நான் கசிந்து கரையவா...??

உன் நெஞ்சுக்கு
நான் மஞ்சமாகவா...?
உச்சம் தொடும்வரை - நான்
அதில் தஞ்சம் கொள்ளவா...?

உன் இடையோரம்
நான் விடை காணவா...?
தடையேதும் இல்லாமல் - நான்
உனை மேயவா...??

மேகமாய் உனக்குள் நான்
மோகம் வளர்க்கவா...?
முத்த மழையில் உன்னை நான்
மொத்தம் நனைக்கவா...??

----அனீஷ் ஜெ...

21 Nov 2010

ஹைக்கூ - உன் காதல்

ஹைக்கூ - உன் காதல்


என்னை கொல்வதற்கென்றே
பிறந்தவள் நீ...!
பக்கத்தில் இருக்கும்போது
பார்வைகளால்...
தூரத்தில் இருக்கும்போது
நினைவுகளால்...


***********************************************************************************

நல்ல மழை...!
நாம் இருவரும்
ஒற்றை குடையில்...!!
இருந்தும் நான்
முழுதாய் நனைகிறேன்...!!!
உன் காதலில்...

-----அனீஷ்...

18 Nov 2010

தண்டனைகள்

தண்டனைகள்


வழியெங்கும் என்னை
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...
 
சில கணங்களில் என்னை
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!

என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...

இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...

ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!

அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!

தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...

நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!

ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...

-----அனீஷ்...

13 Nov 2010

நீ என்பவள்...

நீ என்பவள்...


அமாவாசை வானத்தின்
அடர்ந்த கருமேகம் உன் கூந்தலானது...!
ஆயிரம் கதைகள் சொல்லி
அது உன் இடை வரை ஊஞ்சலாடுது...!!

நீரிலே துள்ளும் - இரு
நீல மீன்கள் உன் கண்களானது...!
அது அசையும் ஓரப்பார்வையில்
என் நெஞ்சம் விண்ணில் பாயுது...!!

கட்டி இழுக்கும் - இரு
கறுப்பு கோடுகள் உன் புருவமானது...!
அது வளைந்திருப்பதால்
வானவில்லுக்கும் அதுவே உருவமானது...!!

பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!

தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!
அதை காணும்போதெல்லாம் - என்
உதடுகள் ஏனோ பசிகொள்ளுது...!!

உலகின் அத்தனை மலர்களும்
ஒன்றாய் சேர்ந்து உன் கைவிரலானது...!
அது என்னை தொட்டுத்தொட்டு
பேசும்போது என் மனம் பறிபோகுது...!!

உன் பாதங்கள் வரையும்
சுவடுகள் கூட சுவாசம் கொள்ளுது...!
உனக்குள் என் இதயம்
இங்கே தொலைந்துபோகுது...!!

------அனீஷ்...

11 Nov 2010

ஹைக்கூ- குட்டி கவிதைகள்

ஹைக்கூ- குட்டி கவிதைகள்



நிலத்தில்தான்
நிற்க்கிறேன் நான்...!
ஆனாலும்
நிலவோ - கை
நீட்டித்தொடும் தூரத்தில்...!!
என் அருகில் நீ...


***********************************************************************************


நொடிக்கு
கோடி கவிதைகள் எழுதும்,
என் பேனா...!
உன் புன்னகையை
ஒரு துளி
மையாக்கினால்...


***********************************************************************************


அவளை நினைத்து
அவள் நினைவுகளுடன்
நான்...!
என்னை மறந்து
என் நினைவுகளில்லாத தனிமையில்
அவள்...!!


-----அனீஷ்... 

4 Nov 2010

நான்காண்டு நட்புக்காலம்

நான்காண்டு நட்புக்காலம்


நண்பா...!
நாம் கைகோர்த்து
நடந்த பாதைகளில்-இன்று
நட்பின் சுவடுகள்.....

சமாதானாமாவதற்க்காகவே
நாம் போட்ட
சின்ன சண்டைகளும்,
நான்காண்டுகள்
நம்மை சுமந்த
நான்காவது பெஞ்சும்
இன்றும்
என் மனத்திற்குள்...

எந்த இறப்புக்கும்
இத்தனை துளி
கண்ணீர் துளிகளை
சிந்தியதில்லை
என் கண்கள்...

இப்போதுதான் தெரிகிறது...!
மரணத்தைவிடவும்
இந்த பிரிவு
கொடியது என்று...

இரு உதடுகளாய்
நாம் இருந்து,
நாம் பிரிந்தால்தான்
வார்த்தையென்றால்
நான் ஆயுள் முழுவதும்
ஊமையாக வாழ்ந்திருப்பேன்.....

இரு இமைகளாய்
நாம் இருந்து
இப்போது பிரிவதென்றால்
நான் ஆயுள் முழுவதும்
இருட்டிலே கிடந்திருப்பேன்...

ஆனால்
நமக்குள் இருப்பதோ
ஒற்றை உயிரல்லவா....!

இந்த கவிதையில்
கலந்து கிடப்பது
கவலைகள் மட்டுமல்ல...!!
காய்ந்து போன-என்
கண்ணீர் துளிகளும் தான்...

இப்போது நாம்
பிரிந்தாலும்
இன்னும்
அடுத்ததாய் ஒரு
ஆயிரம் கோடி
ஆண்டுகளுக்கு
நான் உன் இதயத்திலும்
நீ என் இதயத்திலுமாய்
வாழ்ந்து கொண்டிருப்போம்...!
நினைவுகளாய் அல்ல...!!
நிஜங்களாய்...
நட்பின் நிஜங்களாய்....

-----அனீஷ்...