20 Jan 2011

எனக்காய் படைக்கப்பட்டவள் அவள்...


காதல்...!
என்னையும் அவளையும்
கட்டி இழுத்த
ஒற்றை காந்தம்...!!

இதயப் பரிமாறல்கள்
எங்களை இடமாற்றியது...!
இப்போது
நான் அவளிடத்திலும்,
அவள் என்னிடத்திலும்...

என் கறுப்பு கனவுகளுக்கு
காதலால் வண்ணம் பூசியவள் அவள்...!
ஒரு சொட்டு காதலால்
என்னை தொட்டுப்போனவள் அவள்...!!

சின்ன ஊடல்கள் இருந்தாலும் - என்
சிறு இதயம் துடிப்பதோ அவளுக்காகதான்...!

சுவாசிப்பதால் இல்லை...!
அவளை நேசிப்பதால்தான்
உயிரோடிருக்கிறேன் நான்...

இரு மனங்களும் பக்கத்தில்...!
ஆனால்
நாங்களோ தூரத்தில்...

பவுர்ணமி வானத்திலும்
பார்க்க முடியவில்லை நிலவை...!
இதயத்திற்க்குள் தங்கியிருந்தும்
இன்னும் பார்க்கவில்லை அவளை...!!

ஆசைகள்
அடிநெஞ்சில் குடியிருக்க
அவள் நினைவுகள்தான்
ஆகாரம் எனக்கு...!

இமைகளை மூடிக்கொண்டால்
இருள் தெரியவில்லை...!
அவள்தான் தெரிகிறாள்...

அவளிடம் பேச என்னிடம்
ஆயிரம் கதைகள் இருக்க - அவள்
காதுகள் ஏனோ
கண்ணுக்கெட்டாத தூரத்தில்...

தொலைவில் இருந்தாலும்
நினைவுகளில் தான்
விருப்பங்கள்
நெருக்கம் கொள்கிறது...!

ஆகாயத்திற்க்கு கீழ் பூமியில்
அவள் கடைசி பெண்னில்லை...!
ஆனாலும்
அவள் படைக்கபட்டதோ
எனக்காகத்தான்...

நித்திரையை மறந்து
நித்தம் அவளை நினைத்து
காத்திருந்தேன் நான்...!
அவளை சந்திக்க...

கடைசியில்,
காத்திருந்து
சந்தித்தேன் அவளை நான்...

மணிக்கணக்கில் பேசுபவள்
மவுனங்களால் பேசினாள் அன்று...!
வெழுத்திருந்த கன்னங்களோ
வெட்கங்களால் சிவந்தன...!!

பேச நினைத்ததெல்லாம்
உதடுகளுக்குள்ளேயே
உயிர் விட்டது...

புன்னகைத்தவள்
மவுனத்தால் புதிர் போட்டள்...

கடைசியில் மவுனங்கள் கரைய
மலரிதழ்கள் விரிய
வாய் திறந்தாள் அவள்...

நிறையவே பேசிக்கொண்டோம் அன்று...

இதயங்கள் இன்னும்
இறுக்கமாகி நெருக்கமானது...!

சோகங்கள்...!
கோபங்கள்...!!
எதிர்ப்புகள்...!!!
எல்லாவற்றையும் மீறி
எனக்கு சொந்தமானாள் அவள்...

அவள்
விரல் பிடித்தேன் நான்...

கனவுகண்ட வாழ்க்கை...!
கவலையற்ற வாழ்க்கை...!!
கைகூடியது எனக்கு...

கோடி சந்தோஷம்
கூடி வந்த உணர்வு...

வாழ்க்கை பாதையில்
அவளோடு சேர்ந்த பயணம்...!
அளவில்லாமல் மகிழ்கிறேன் நான்...

காலங்கள் கரைந்தோட
வயதாகிப் போனது எனக்கு...

பறிபோன பற்கள்...!
குழி விழுந்த கண்கள்...!!
நரைத்துப்போன தலை...!
உளறும் உதடுகள்...!!

தளர்ந்து போன கால்களோ
தரையில் பயணிக்க
தயக்கம் காட்டுகிறது...!

ஆனாலும்,
தள்ளாடும் வயதிலும் நான்
சந்தோஷமாய்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு துணையாய் வரும்
அவள் விரல்களை பிடித்துக்கொண்டு.....

----அனீஷ்...
SHARE THIS

17 comments:

  1. தல அற்புதம் தல .....
    முழு காதல் வாழ்க்கையை அதி அற்புதமாய் வரிகளில் வடித்து இருக்கின்றீர் ...
    ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
  2. வார்த்தைகளை லாவகமாகப் பயன்படுத்தியிருக்கின்றீர்கள்!! அருமை!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  3. தள்ளாடும் வயதிலும் கைகொடுப்பதுதான் காதலின் தாய்மை!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  4. கவிதை அருமையிலும் அருமை கவிக்கா.
    நினைத்து கவிதை எழுதுவதற்கும், அனுபவித்துக் கவிதை எழுதுவதற்கும் உண்மையிலேயே நிறைய வேறுபாடு உண்டு.

    ReplyDelete
  5. உங்கள் “பூ”(வலைப்பூ) மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கு. நிறைய முறைகள் அழகாக போட்டுவச்சிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. காதல் வரிகள் சொல் அவார்த்தைகள் இல்லை நண்பா அருமை சிறப்பு
    அனீஷுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @அரசன்: ரசித்தமைக்கும், பாரட்டியமைக்கும் மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  8. @வைகறை: //தள்ளாடும் வயதிலும் கைகொடுப்பதுதான் காதலின் தாய்மை// சரியாக சொன்னீர்கள்...!
    உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி...!!!

    ReplyDelete
  9. @athira: உண்மைதான்...! இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது...! அனுபவித்து கவிதை எழுதுவதில் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்...! நினைத்து கவிதை எழுதுவதில் எண்ணங்களை மட்டுமே வெளிப்படுத்த முடியும்...!
    உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி...!

    ReplyDelete
  10. @அ.செய்யது அலி: உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி நண்பா...!

    ReplyDelete
  11. wow very nice love poem

    ReplyDelete
  12. @Gayathri: மிக்க நன்றி...!!!

    ReplyDelete
  13. unga aval kudutu vechueruka

    ReplyDelete
  14. @anishka nathan: நீங்கள் சொன்னது உண்மைதான்...! :)
    ரொம்ப நன்றி!!!

    ReplyDelete
  15. முதுமையே மிக அழகாக சொன்னிங்க FRIEND

    -லிவினா

    ReplyDelete
  16. @LIVINA: மிக்க நன்றி...!!

    ReplyDelete
  17. காதலின் அருமையை புரியவச்சுட்டேங்க தல உங்கல்கவிதை தொடர எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete