26 Oct 2011

அவள் வீட்டு தீபாவளி !


கையிலே
எரியும் மத்தாப்பும்,
இதழ்களில்
முல்லைப்பூ சிரிப்புமாய்
அவள் வீட்டுமுன் அவள்...!

பச்சை நிற
புதுப்புடவையில்
அவள் அழகாகவே தெரிந்தாள்...!

இன்றாவது அவளிடம் நான்
காதலை சொல்லிவிட வேண்டும்...!

அவளை தாண்டிச்சென்ற என்னை
அவள் கவனித்திருக்கலாம்...!
ஆனாலும்,
வழக்கம்போல் என்னை
கண்டுகொள்ளாதவள் போல் அவள்...!

அவளருகில் சென்று
காதல் சொன்னேன்...!
மவுனத்தை அள்ளி வீசிவிட்டு
விலகி சென்றாள்...!

மறுபடியும் சொன்னதும்
யோசிக்கவில்லை அவள்...!
சட்டென மறுத்தாள்...!

என் பதிலுக்கு காத்திராமல்
ஓடிச்சென்று
பட்டாசை
பற்ற வைத்தாள்...!

பட்டாசுடன் சேர்ந்து
படபடவென
வெடித்துக்கொண்டிருந்தது...!
அவள் காதல் பற்ற வைத்த
என் இதயமும்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

32 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய காதல் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதை ......"காதல் "

    காதல் கவிஞனுக்கு
    என் இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. @சீனுவாசன்.கு: மிக்க நன்றி... :)
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ! :)

    ReplyDelete
  6. @கோகுல்: நன்றி நண்பரே... :)
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் ! :)

    ReplyDelete
  7. @அம்பலத்தார்: வணக்க்ம் & ரொம்ப நன்றி...! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் ! :)

    ReplyDelete
  8. @செய்தாலி: வாங்க நண்பரே வாங்க...!
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி... :)
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் ! :)

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. @வைரை சதிஷ்: நன்றி நண்பா...! உங்களுக்கு, உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  12. supera iruku.. different thinking.. nice..

    ReplyDelete
  13. @kilora: ஹ்ம்ம்ம்ம் நன்றி நன்றி :T:T

    ReplyDelete
  14. அடடா என்ன பொண்ணு இவள் ...! ஒரு அருமையான கவிஞருடன் வாழும் பாக்கியத்தை இழந்துவிட்டாளே... .அது போகட்டும் சகோ உங்களுக்கும் உங்கள் உறவினர் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி அழகிய கவிதைப் பகிர்வுக்கு .

    ReplyDelete
  15. @அம்பாளடியாள்: வாங்க வாங்க...! :)
    ஹாஹா என்ன இப்படி சொல்லிட்டீங்க...! நான் இந்த கவிதையில் குறிப்பிட்டிருப்பவர் எழுத படிக்க தெரியாத ஒரு பையன்ங்க...! நான் யாரை பற்றியோ எழுதினதை, நீங்க “வேற யாரோ” பற்றி எழுதியதா தப்பா நினைச்சுட்டீங்களே...! ;)
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...! :)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!

    ReplyDelete
  16. parththu boss,,
    pattasu nnu ninachchi ungalayae ............. dap poraanaga ....appuram sivagasi vadivaelu mari aagidap poringa ,,,,,,,,,,,,,,,

    unmaiyavae kavithai arumai ,,,,,kalakkunga ...............

    ReplyDelete
  17. அருமை அருமை
    அருமையான கற்பனை
    அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. @athira: Oye ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுறீங்க...?:Q:Q
    வந்து எட்டிப்பார்த்தமைக்கு ரொம்ப நன்றி...! ;)

    ReplyDelete
  19. @Anonymous: அட உங்க உண்மையான பெயரில கமெண்ட் போடலைனா, உங்க வாலுல பட்டாசு பற்ற வச்சிருவேன்... =)) =))

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க... ;)

    ReplyDelete
  20. @Ramani: வாங்க ஐயா...!
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)

    ReplyDelete
  21. தல கவிதை அருமை .. மிகவும் ரசித்தேன் ,..
    மௌனத்தை அள்ளி வீசிட்டு அந்த வரிகள் படித்து நெகிழ்ந்தேன் , மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. கவிதை...காதல்...நலம்...கவி நலமா...?

    ReplyDelete
  23. @அரசன்: வணக்கம் தல...! வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  24. @"என் ராஜபாட்டை"- ராஜா: வாங்க நண்பரே...! :)
    வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  25. @ரெவெரி: வருக வருக... :D
    கவியும் நலமே...! தாங்கள்???
    வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  26. nice poem ani

    ReplyDelete
  27. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  28. depavaliyil ippadi oru athisayamaa?

    by

    livina

    ReplyDelete
  29. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  30. பற்ற வைத்த பட்டாசை உங்க மேல தூக்கிப் போடத வரைக்கும் சந்தோசம்.......

    அருமையாக உள்ளது ;)

    ReplyDelete