30 Oct 2011

என் காதல் உனக்கு...

 முன்குறிப்பு: இந்த வலைத்தளத்தில் இது என் நூறாவது (100-வது) கவிதை பதிவு.


காற்றை பறித்து - அதில்
காதல் விதைத்து - அதை
உன் மூச்சில் நான் சேர்ப்பேன்...!
நிலவை எடுத்து - அதில்
வண்ணம் தொடுத்து
உன் நெற்றிப்பொட்டாய் கோர்ப்பேன்...!!

உன் வழியில் கிடந்து,
சிறு பூவாய் மலர்ந்து,
உன் பாதம் நான் சுமப்பேன்...!
உன் விழியில் விழுந்து,
சின்ன இதயம் நுழைந்து,
உன் உயிரிலே கலப்பேன்...!!

உன் மவுனம் திறந்து,
அழகிய வார்த்தை எடுத்து,
கவிதை நான் நெய்வேன்...!
உன் அழகை பிடித்து
அதில் வண்ணம் குழைத்து
ஒரு வானவில் செய்வேன்...!!

உன் மார்பில் புதைந்து,
நான் என்னையே மறந்து - உனக்குள்
இரவும் முழுதும் நான் தொலைவேன்...!
உன் கன்னத்தில் தவழ்ந்து,
உன் கூந்தலில் சிதைந்து - உன்னில்
என்னை தேடி அலைவேன்...!

உன்னை நெஞ்சோடு அணைத்து,
உன் சோகங்கள் துடைத்து,
உன்னோடு நான் வருவேன்...!
என் இதயம் பிளந்து - அதில்
உன் உயிரை சுமந்து - நான்
என் காதல் உனக்கு தருவேன்...!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

29 comments:

  1. அழகாக இருக்கு கவிதை, ஆனா நீங்க காதலைக் கொடுத்தால் போதுமோ? அவிங்க வாங்கோணுமே....:R:R:R:R:R.

    ReplyDelete
  2. காதலிலும் சதம் அடிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வரிகளில்
    நிரம்பி வழிகிறது
    தலைவனின் காதல்
    வாக்குறுதிகள்

    அருமை ...(:

    ReplyDelete
  4. @athira: ஹாஹா சும்மா காதலை கொடுத்தா மட்டும் போதாது? யார் கிட்ட கொடுத்தா அதை வாங்குவாங்களோ அவங்க கிட்ட கொடுக்கணும்...! ;);)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!

    ReplyDelete
  5. @சீனுவாசன்.கு: காதலில் சதமா??:U:U:U:U:U:U:U:U:U:U:U
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !! :)

    ReplyDelete
  6. @செய்தாலி: வாங்க நண்பரே வாங்க...! :)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !! :)

    ReplyDelete
  7. mmmm,,,, anishj mmm payangara romantic kavithai...
    rendu munu murai thirumba thirumba padikka vachcha kavithai,,,,,,,superb.....superb...superb...............

    avanga yuirai unga heart kulla vakkanum maa boss?
    appadinaa neenga open heart surgery panna poringalaa thala??

    ithukkulam hospital,doctor fees nnu niraiya saelavagum boss,,,,,,,

    ReplyDelete
  8. 100vathu kavithai koduththa ungalukku enathu vazththukkalum,parattukkalam........

    thodarnthu niraiya kavithaigal kodukka ungalukku ella valanaium kodukka iraivanai vaendik kolgiren .....

    nalla ezhthuringa anishj,,,, nalla vaarththai korththu azhaga vilayaduringa ,,,,,,,,,,

    ReplyDelete
  9. மிக அழகா இருக்கு அனீஸ் வரிகள். எனக்கு பிடித்த வலைப் பதிவில் உங்களோடதும் ஒண்ணு. சதம் அடித்ததுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அனிஷ் உங்களுக்கு வர போற மனைவி ரொம்ப லக்கி தேவதை .. எப்படி இப்படி எல்லாம் எழுதுறிங்க .. lovely வரிகள்..சூப்பர்.. சூப்பர்.. ரூம் போட்டு யோசிபின்களா .. :)

    ReplyDelete
  11. @வைரை சதிஷ்: நன்றி ! நன்றி !!

    ReplyDelete
  12. @Anonymous: ஏங்க hospital, doctor அது இதுனு அபசகுனமா பேசுறீங்க..? :U:U
    அதுசரி அதென்ன “பயங்கர” romantic கவிதை? :Y:Y
    100-வது கவிதைக்கான உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க...! :)
    பெயரில்லாமல் கமெண்ட் போடுவதற்கு பதிலாக, உங்க வீட்டு ரேசன் கார்டுல இருக்குற உங்க பெயரில் கமெண்ட் போட்டா ரொம்ப சந்தோசப்படுவேன்... ;)
    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! மீண்டும் வருக...! :):)

    ReplyDelete
  13. @kavitha: வாங்க கவி கவிதா அவர்களே... ;)
    வருகைக்கு ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  14. @kilora:
    //அனிஷ் உங்களுக்கு வர போற மனைவி ரொம்ப லக்கி தேவதை ..//
    மெய்யாலுமா? கவிதையை படிச்சு எல்லாம் தப்பா எடை போட்டுடாதீங்க.. ;) வாய திறந்தா மட்டுமில்லை, இப்போ எல்லாம் பேனாவ திறந்தா கூடா பொய் பொய்யாதான் வருது =))=))

    //எப்படி இப்படி எல்லாம் எழுதுறிங்க ..//
    கையாலதான்... =))

    //ரூம் போட்டு யோசிபின்களா .. :)//
    இல்ல ரூமுல தாப்பா போட்டுட்டு யோசிப்பேன் :A:A:A:A:A
    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  15. @athira: இப்போ யாரை இப்படி திட்டுறீங்க...? :U:U

    ReplyDelete
  16. தல உன்நெஞ்சில் நிரம்பி வழியும் அந்த காதலுக்கும் காதலிக்கும் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  17. @அரசன்: தல நீங்க நினைக்குற மாதிரி எதுவும் நிரம்பி வழியல...! :)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல !!

    ReplyDelete
  18. nice lines anish.
    Idhellam experience ah ila expectations ah :p sadham adithadhuku vaalthukkal:):):)
    thodararum ungal kavithai sevai..............:)

    ReplyDelete
  19. 100 க்கு வாழ்த்துக்கள்...காதல் அருமை ...கவிதையும்...

    ReplyDelete
  20. @shamilipal: எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம்... ;)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  21. @ரெவெரி: வாங்க வாங்க நண்பரே...!
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  22. good poem yaru adu?

    ReplyDelete
  23. congratulations 1ooth poem ku

    ReplyDelete
  24. @anishka nathan: யாரை கேக்குறீங்க? :Q

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  25. unga kavithai uyir atrupohum kathalukku arthal

    ReplyDelete
  26. @Dhanalakshmi: வாங்க...

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  27. hi super super ur kavithai super

    ReplyDelete
  28. chance eh illa anish...very nic :)
    really ur wife is lucky :)

    ReplyDelete