18 Nov 2011

அவள் அழகி !


அவளை யாரும்
அழகியென்று சொல்லமாட்டார்கள்...!

முகத்தில் முகப்பருக்களின்
முதிர்ச்சி புள்ளிகள்...!

கவர்ச்சி இல்லாத - சின்ன
கண்கள் இரண்டு...!

களைத்து போனது போன்று
கறுப்பு நிற தேகம்...!

ஆர்ப்பாட்டமில்லாத
அப்பாவித்தனமான தோற்றம்...!

ஆனாலும்,
அவளை எனக்கு பிடித்திருந்தது...!

உங்களுக்கு என்னை
உண்மையிலே பிடித்திருக்கிறதா என
அவள் என்னிடம்
ஆயிரம் முறை கேட்டிருப்பாள்...!

பலமுறை பாசத்துடன்
பதில் சொல்லி விடுகிறேன்...!
சிலசமயம் கோபத்துடன்...

அன்று...
புதிதாய் வாங்கிய
புத்தாடையை கட்டிக்கொண்டு
என்னிடம் கேட்டாள்
எப்படியிருக்கிறது என்று...

நீ எப்போதும் அழகுதான்...!
இன்று
இன்னும் கொஞ்சம் அழகு என்றேன்...!!
அவளை திருப்திபடுத்த...

மெல்லிய வெட்கத்துடன் - அவள்
சின்னதாய் சிரித்தாள்...!

அவளின் அந்த
சந்தோஷ புன்னகையில்,
எனக்கு மட்டும் - அவள்
அழகியாக தெரிந்தாள்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

22 comments:

  1. உங்கள் வர்ணனையின்படி என் கண்ணுக்கும் அழகியாகத்தான் தெரிகிறா....:))...

    ReplyDelete
  2. சும்மா உசுப்பேத்திப்போட்டு பின்பு கைவிட்டிடாதைங்கோ கவிக்கா...நான் அந்த அழகியைச் சொன்னேன் :R:R:R:R:R:R(உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ... ஆறு பப்பீஸ் ஓடினால் போதும்... இது வேற ஆறு:))

    ReplyDelete
  3. அருமை அருமை
    அன்பு வயப்பட்ட மனத்தை
    மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. no words to say...
    thanks anish.....

    ReplyDelete
  5. இதமான கவிதை ... அழகூட்டும் வரிகள்...
    காதல் வந்தாலே இந்த மாதிரி எழுத தூண்டும் என்று கூறுவார்கள் .. இப்போ அறிந்து கொண்டேன் .. உங்கள் வரிகள் மூலம்..
    மென்மையான கவிதைக்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள் தல ...

    ReplyDelete
  6. @athira: ஐயோ ஏன் இப்படிலாம் நினைக்குறீங்க..? கை கொடுத்தாதானே கை விடுறதுக்கு...? :U:U

    ஆறு என்னன்னு எனக்கு புரியுது... ஆனா எனக்கு புரிஞ்ச ஆறைதான் நீங்க சொல்றீங்களானு எனக்கு தெரியல...! ஆனா ஒண்ணு நீங்க நினைக்குற ஆறுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை...! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!! :)

    ReplyDelete
  7. @Ramani: என் சமீபத்திய படைப்புகளில் என் மனம்கவர்ந்த படைப்பும் இதுதான்...! :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...! ;)

    ReplyDelete
  8. @kalai: அட சும்மா எதாவது சொல்லுங்க.. :R:R

    எதுக்கு thanks எல்லாம் சொல்றீங்க..? :U:U

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!! :)

    ReplyDelete
  9. @அரசன்: ஓஓ காதல் வந்தாதான் இதுமாதிரி வருமா? :U

    எல்லாரும் காதலி/மனைவி அழகா இருந்தா அவளை அழகி, நிலா அது இதுனு கவிதை எழுதுறாங்க. காதலி/மனைவி அழகா இல்லாவிட்டால் அவள் அழகை எப்படி சொல்வதுனு யோசிச்சேன். இந்த கவிதை வந்திச்சு தல...! so இதுதான் என்னை எழுத தூண்டிச்சு... காதல் அல்ல... :R:R:R:R:R சும்மா தமாசுசுசு :D

    உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  10. உங்களவளின் வெட்கமும் புன்னகை உங்களுக்கு அழகாய்த்தெரிய அருள் புரியப்பட்டவராக நீங்கள்/வாழ்த்துக்கள்,நல்ல கவிதை,நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. அரசனுக்கு என்னாச்சு?:) ரொம்ப ஃபீல் பண்றார்... அரசனுக்கு காதல் வரவில்லையோ...:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    இதில “ஆறு” பப்பி இல்ல, இப்ப கூட ஓடுது.....

    ReplyDelete
  12. அனீஸ் எங்கயோ போய்டீங்க போங்க. சும்மா சொல்ல கூடாது கவிதையை விட அந்தக் காதலன் மனசு தன ரொம்ப பிடிச்சிருக்கிறது

    ReplyDelete
  13. காதல் எனக்கு வராது அக்கா ...
    என் மேல் காதலுக்கு கோபம் .,..

    ReplyDelete
  14. @விமலன்: உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...! :)

    ReplyDelete
  15. @kavitha: காதலன் மனசு ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லி, நீங்களும் எங்கேயோ போயிட்டீங்க.. ;)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  16. @அரசன்: என்ன தல..? எனக்கு காய்ச்சலே வராதுனு சொல்ற மாதிரி சொல்றீங்க...? :Y:Y
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி thala...! :)

    ReplyDelete
  17. ippadiya antha ponna yenga vaipinga.. unga eyes ku mattume alagiya therithuna ava kandipa unga varungala manaviya than irukanum .. please send to your avaga photo.. sari sari.. sirikiram ala kattunga.. sariya.. marvaleous.. great lines.. super eppadi than ippadi ellam.. superb.. :C :C :C :C :C :C :C :C :C :C :C

    ReplyDelete
  18. @kilora: அப்படி ஒரு பொண்ணு வரும்போது கண்டிப்பா போட்டோ காட்டுவேன்...! இப்போதைக்கு இல்லை...!
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  19. aval alge illainu solluringa anaal kavithai

    peyaro aval alagi sema kamadi thaan


    by

    livina

    ReplyDelete
  20. @livina: நீங்க முழுக்கவிதையும் வாசித்த்பின்தானா இந்தா காமெடி பண்றீங்க..? :Y:Y

    வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி...!

    ReplyDelete
  21. Unka kavithai varikal nalla eruku but eppd kavithi la vara mathere girl unmaya eppd varnipekala manasela thonenatha kadan friend

    ReplyDelete