29 Apr 2013

பிரியாத நினைவுகள்...

பிரியாத நினைவுகள்...


என் இதயத்துடிப்பை போலவே,
உன்னை என் இதயத்தில் சுமந்த
என் காதலும்
உண்மையாகவே இருந்தது...!

பெற்றவர்களுக்காகவும்,
மற்றவர்களுக்காகவும்
உன்னை நான்
தூக்கியெறிந்தபோது,
தூக்கிலிட்டு கொல்லும்
வலி கொண்டது
உன் இதயம் மட்டுமல்ல...!
என் இதயமும் தான்...

ஏமாற்றுக்காரி என்ற பட்டமே
எனக்கு நீ கொடுத்தாய்...!
மற்றவர்கள் மறக்க சொல்ல
உள்நெஞ்சு
உன்னுடனே வாழ நினைத்தது...!

என் மவுனத்தின் அழுகைகள்
என் கன்னங்களில் வழிந்தோடி,
என் உள்ளங்கைகளில்
அடைபட்டு போனது...!
உனக்கது தெரிய வாய்ப்பில்லை...!!

விதியை வெல்ல
வழியில்லை என் நினைத்து
விட்டு சென்றேன் உன்னை...!

நீ இருக்கும்
இடம் கூட தெரியாமல்,
வாழ்க்கை பாதைகளில்
பிரிந்தே பயணிக்கிறோம்
நாம் இன்று...!

எப்பொழுதாவது எனக்குள்
எட்டிப்பார்க்கும்
உன் நினைவுகளிடம் - நான்
மறக்காமல் சொல்லிவிடுகிறேன்...!
மறந்துபோக சொன்னதற்காய்
மன்னித்துவிடு...

----அனீஷ் ஜெ...

16 Apr 2013

காதல் கைதி !

காதல் கைதி !


சில நாட்களாய்
நோட்டமிடுகிறேன்...!

எட்டிநின்றால்
ஏமாற்றம்தான் மிஞ்சும்...!

பழக்கமில்லாததால்
படபடக்கிறது மனது...!

திருடுவதைத் தவிர
வழியேதுமில்லை....!

ஆம் பெண்ணே...!

உன் இதயம் திருட
உன்னை பின்தொடர்கிறேன்...!

கண்டறிந்து என்னை நீ
கைதியாக்கிவிடு...!

உன் மனச்சிறையில்
அடைபட்டு - நான்
ஆயுள் முடிக்கிறேன்...

----அனீஷ் ஜெ...