30 Jun 2012

வேண்டுகோள் !

வேண்டுகோள் !


என்னை நீ
நேசிக்காவிடினும்,
என் கவிதைகளையாவது 

ஒருமுறை நீ
வாசித்துவிடு...!
உன் கண்கள் பட்டு,
உயிர் கொண்டு
என் கவிதைகளாவது
சுவாசிக்கட்டும்...!!

----அனீஷ் ஜெ...


23 Jun 2012

மழை... நீ... நான்...

மழை... நீ... நான்...


கொட்டும் மழையில்
குடையில்லாமல்
நனைகிறாய் நீ...!

ஈர உடை மறைக்கும் - உன்
தேக அடையாளங்கள்...!

உன் தேகம் நனைத்த துளிகள்
நதியாகிப்பாயும்
உன் இடையோரங்கள்....!

கண்டு நின்ற நானோ
குடையிருந்தும் நனைகிறேன்...!
மோக மழையில்...

----அனீஷ் ஜெ...

20 Jun 2012

வழிகாட்டி !

வழிகாட்டி !


விரல்களுக்கிடையில்
விளக்கு வெளிச்சம்...!
இரவு பகல் பாராமல்
வழிகாட்டுகிறது
கல்லறைக்கு...!!
சிகரெட்...

----அனீஷ் ஜெ...

8 Jun 2012

இதயம் கேட்கிறாய் நீ !

இதயம் கேட்கிறாய் நீ !


இதயம் கேட்கிறாய் நீ...!

கடனாய் அல்ல...
காதலுடனே தருகிறேன் நான்....!
என் இதயத்தை உனக்கு...

எடுத்துசென்றுவிட்டு,
என்றாவது ஒருநாள்
திருப்பி மட்டும்
தந்துவிடாதே...

உடைந்துபோய்,
உயிர் துறந்துவிடும்
என் இதயம்...

----அனீஷ் ஜெ...

3 Jun 2012

நீ வர வேண்டும்...

நீ வர வேண்டும்...


என் தெருவோரம்
எப்போதாவது
வருகிறாய் நீ...!

மழை வரும் நாட்களில்
மண்ணில் முளைக்கும்
காளான்கள் போல,
நீ வரும் நாட்களில்
என்னில் முளைக்கிறது
ஏதோ புதுவித உணர்வு...!

நீ வரும் வழியில் காத்திருந்து,
என் விழியெனும் ஜன்னலை திறந்து
காண்கிறேன் நான் உன்னை....

நீ பார்வை கோலமிட்ட
என் மன வாசலில்,
புள்ளிகள் கூட இப்போது
பூ பூத்து கிடக்கின்றன....!

ஒவ்வொரு முறையும்
ஓரப்பார்வை வீசி - நீ
என்னை தாண்டி செல்லும்போதும்,
இழுத்து மூடியிருந்த - என்
இதயக்கதவை திறந்துவிடுகிறேன்...!
என் இதயத்திற்குள்
நிரந்தரமாய் குடியேற
நீ வர வேண்டும் என...

----அனீஷ் ஜெ...