இந்த இரவும், இந்த பொழுதும், இந்த ஆண்டும் இப்படியே முடியப்போகிறது...! நடு இரவுகளின் நட்சத்திர கொண்டாட்டங்களில் தொலைந்து போய்விடக்கூடாது...! அடுத்த ஆண்டிற்காய், பத்திரமாய் நான் மனதின் ஓரம் மடித்து வைத்துக்கொள்கிறேன்...! நீ என்னும் நினைவுகளை... ----அனீஷ் ஜெ...
நீண்டவொரு இடவெளிக்குபின் நீண்டகால நண்பனொருவனை மீண்டும் சந்தித்தேன் நான்...! அரைகோப்பை தேநீருடன் உரையாடல்கள் ஆரம்பித்தது...! அலுவலக நேரம்...! ஆண்டு வருமானம்...!! அன்பான மனைவி...! ஆண் குழந்தையொன்று....!! அவனின் அனைத்தை பற்றியும் அவன் பேசிக்கொண்டிருந்தான்...! ”சரிடா நீ சொல்லு” என்றவனிடம், ”அப்படியேதான் இருக்கிறேன்” என்று அங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...! விடவில்லை அவன்...! மனம் எழுதிவைத்திருந்த மர்மக்கதைகளை - என் முகம்வழியே வாசித்திருக்கலாம் அவன்...! இயல்பாய் இருப்பதாய் காட்ட இதழ் சிரித்தேன் நான்....! ஒரு நொடி எதையோ யோசித்தான் அவன்...! “சென்ற வாரம் அவளை சென்னையில் பார்த்தேன் நான்” என்றான் என்னிடம்...! கண்கள் இறுகிய என்னை கண்டுகொள்ளாமலே தொடர்ந்தான்...! “அவளே புருசன் குழந்தைனு அமர்களமா வாழ்றா, நீ ஏன் இப்படி இருக்க?” என்றவனிடம் புன்னகைத்தே முகம் கவிழ்த்தேன்...! காலியான தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு புறப்படத் தயாரானான்...! வாசல்வரை வழியனுப்பவந்த என்னிடம் “அவளை மறந்திட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என அழுத்தமாகவே சொன்னான். நான் சொன்னேன்...! “சீக்கிரம் காதலை மறந்து சீக்கிரம் மற்றொருவரோடு வாழ என் காதல் அவள் காதலில்லை...!” ”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம் நான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...! “நான் என்பவன் அவள் அல்ல...” ----அனீஷ் ஜெ....
இருகைகளையும் நாம் இறுக்கி கோர்த்தபடியே நீண்டதூரம் நடந்திருக்கிறோம்...! இருக்கைகளின் எதிரெதிரில் இருவிழியோடு விழி உரசி முகம் நோக்கி அமர்ந்திருக்கிறோம்...! ஊட்டிவிடப்பட்டால் உணவில் சுவை அதிகரிக்குமென மனதிற்குள் நம்பியிருக்கிறோம்...! இருளை போர்த்திக்கொண்டு இரவு முழுவது நாம் அலைபேசியில் ஆரத்தழுவியிருக்கிறோம்...! இமைகளை இறுக்கி மூடியே இரு உதடுகளால் - நம் எச்சிலின் ருசி அறிந்திருக்கிறோம்...! குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது குடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை முடிவெடுத்து முடித்திருக்கிறோம்...! இப்போது சொல்...! என்னை மறப்பதென்பது உனக்கு அவ்வளவு எளிதானதா...? ----அனீஷ் ஜெ...
விடைதெரியாத கேள்விகளுடன் - உன் கடைக்கண் பார்வைக்காய் காத்துநின்றேன் நான்...! கண்களில் வழிந்த - என் கண்ணீரை அலட்சியபடித்தி - உன் வழிகளில் மறைந்தாய் நீ...! உன் பெயர் சொல்லியே உரக்ககத்தும் நினைவுகளை உறங்கவைக்கும் தாலட்டை உயிருக்குள் தேடி உருகுகிறேன்...! உன் எச்சில் பட்ட என் உதடுகள்...! உன் விரல்கள் தொட்ட என் கன்னங்கள்...! இவையனைத்தும் நினைவாலயாமாய் கண்ணாடிமுன் தெரிகிறது....! மறக்கும் முயற்சிகளில் சிறிதும் முன்னேற்றமில்லை...! ஆதலால் நான் அம்முயற்சியை விட்டுவிட்டேன்...! தீவிரமான தேடல்களில்தான் தீர்வுகள் கிடைக்கிறது...! மறப்பதென்பது இங்கு மரணிப்பதைபோல எளிதானதல்ல... ----அனீஷ் ஜெ...