நிலவில்லா
அமாவாசை காலம்...!
வெறும் வானின்
வெள்ளி நட்சத்திரங்களை
வெறித்துப் பார்த்தபடி
நீயும் நானும்...
சமரசமாகாத சண்டையின்
மிச்ச மீதிகள்
கொஞ்சம் எஞ்சியிருக்குறது
நமக்குள்...
கோபங்களை
கொஞ்சம் விலக்கிக்கொள்ள
இருவருக்குமே
விருப்பமில்லை...!
முதலாய் வந்து
முகம் சிரித்து பேசுவாய் என்ற
என் எதிர்பார்ப்பு
ஏமாற்றமாகவே,
அருகில் வந்து - உன்
தோளோடு தொட்டேன் நான்...!
அதற்காகவே காத்திருந்தவள் போல்
அணைத்துக்கொண்டாய்
நீ என்னை...
இப்பொழுது அமாவாசை வானத்தில்
நம் இருவருக்கும் மட்டும்
நிலா தெரிந்தது...!
----அனீஷ் ஜெ...