இரவுகள் என்னை
இரக்கமில்லாமல்
இம்சிக்கின்றன...!
செவியோரம்
சேகரித்துவைத்த
உன் குரலோ - என்னை
உறங்கவிடாமல்
உயிர் பறிக்கிறது...!
இரு விழிகளும்
இரவு பகலென நீர்விட,
மரண வலியோ
மனதிற்குள் முளைக்கிறது...!
தொண்டைக்குள் சிக்கியே
தொலைந்து போகிறது...!
என் வார்த்தைகள்...
இதயத்துடிப்பை அடக்கி,
மூச்சுக்காற்றை நிறுத்தி,
ஆயுள் முடிக்க சொல்லி
ஆணையிடுகிறது மனது...!
என்றாவது ஒருநாள்
என்னை நீ
பிரிந்துவிடுவாயோ என
சின்னதாய் நினைத்துக்கொண்டாலே,
தொடரும் சில நாட்கள்
எனக்கு நரகமாகிவிடுகின்றன...!
ஒருவேளை
நீ என்னை
நிஜமாகவே பிரிந்தால்...?
----அனீஷ் ஜெ...