21 Nov 2012

நான்காம் உலகப்போர் !

நான்காம் உலகப்போர் !


வெட்கங்கள் - உன்
பூந்தேகத்தில்
புடவை நெய்யும் நேரமிது...!

முத்தங்கள் - உன்
உடல் பிரதேசத்தில்
ஈரம் விதைக்கும் காலமிது...!

உன் தேகவீணையில்
என் விரல்கள் இசைக்கையில்
ஆசை தூண்டுது
அதன் ஓசைகள்...!

உன் மார்புபோர்வையை
நான் இழுத்து போர்த்தையில்
எல்லை தாண்டுது
என் ஆசைகள்...!

தீண்டல்களில்
தீ பற்ற,
உன் இடையோரம்
நான் முட்ட,
உன் தேக சூட்டினில்
பட்டு தெறிக்குது
என் மோகங்கள்...

கட்டில் முழுவதும்
கலவர பூமியாக,
உனக்கும் எனக்குமாய் - மூன்றாம்
உலகப்போர் வெடித்தது...!

மோகங்களை நான் கொஞ்சம்
மிச்சம் வைக்கிறேன்...!
நாளைய நமது
நான்காம் உலகப்போருக்காக...

----அனீஷ் ஜெ...

18 Nov 2012

தலைப்பு செய்திகள் !

தலைப்பு செய்திகள் !


காதல் என்றேன்...!
கண்டுகொள்ளவில்லை நீ...!!

பின்னால் நடந்தேன்..!
உன்னுள் காதல் கனியவில்லை...!!

இன்று ஏன் புதிதாய்
என் முகம் பார்த்து
புன்னகை பூக்கிறாய்...?

உயிருக்குள்
உன் புன்னகை பூக்கள்
உதிர்ந்து விழுகிறது...!

இன்னொருமுறை - என்
இதயத்தில்
உன் பார்வைகளால்
ஊசிமுனை ஏற்று...!

தலைகால் புரியாமல்
என் இதயம்
ஆயுள் முழுவதும்
தலைப்பு செய்தி
வாசிக்கட்டும்...!
உன் பெயரை...

----அனீஷ் ஜெ...

15 Nov 2012

காதல் கவிதைகள் !

காதல் கவிதைகள் !


கல்லூரியின்
விடுமுறை நாட்களிலெல்லாம்
என் மனதோடு
தவறாமல் பிறந்துவிடுகிறது....!
என் வீட்டின் எதிர் வீட்டில்
அவள் பிறந்திருக்கலாமென்ற
என் ஆசை....

***********************************************************************************


என் செல்போனின் மேல்
எனக்கு கோபம்...!
உன் முத்தங்களின்
ஈரங்களை திருடிவிட்டு,
அதன் சத்தங்களை மட்டும்
என் காதோரம் வருடி செல்கிறது...!

***********************************************************************************


விடாமல் பெய்கிறது மழை...!
குடையில்லாமல் நீ
வெளியே வந்துவிடாதே....!!
மழைக்கு
காய்ச்சல் வந்துவிடப்போகிறது...!!!

***********************************************************************************


புண்ணியம் செய்தவைகள் - உன்
புத்தகங்கள்...!
மிக அருகிலே - உன்
முக தரிசனங்கள்...

***********************************************************************************


உன் பார்வைகளால்
எனக்குள் வேகமாய் பரவுகிறது...!
காதல் நோய்...
பெண்ணே !
நீயே ஒருமுறை என்னை
பரிசோதித்துவிடு....!
உன் பார்வை நேரத்தில்...

----அனீஷ் ஜெ....



13 Nov 2012

தீபாவளி கவிதை !

தீபாவளி கவிதை !


தீபாவளி வெளிச்சத்தில்
தேவதையா
ய்
ஜொலிக்கிறாய் நீ...!
வீட்டிற்கு வெளியே மட்டும்
வந்துவிடாதே...!!
மரித்து போன நரகாசுரன் - நீ
சிரித்து பேசுவதை காண
மறுபடியும் பிறந்து வரலாம்...!!!


***********************************************************************************


என் வீட்டில் செய்த
எந்த தீபாவளி இனிப்புக்கும்
சுவையில்லை...!
அன்றொருநாள்
நான் உண்ட
உன் உதடுகளை போல...

***********************************************************************************


பார்வைகளால்
பற்றவைக்கிறாய் நீ...!
பட்டாசாய் - என்
உயிருக்குள் வெடிக்கிறது...!
காதல்...

----அனீஷ் ஜெ...

9 Nov 2012

பார்வைகள் போதும்...

பார்வைகள் போதும்...


மரக்கிளையிலிருந்து
மரணித்து விழுந்த
உலர்ந்த சருகாய்,
உன் சாலையில்
சிதறிக்கிடக்கிறேன் நான்...!

உன் பாதங்களால்
வதைக்காமல்,
உன் பார்வைகளை
விதைத்து செல்...!
உலர்ந்த என் உயிருக்குள்
உன்னால் பூக்கள் முளைக்கட்டும்...!

----அனீஷ் ஜெ...



6 Nov 2012

4 Nov 2012

வேண்டுதல்களோடு காத்திருப்பேன் !

வேண்டுதல்களோடு காத்திருப்பேன் !


என் மூச்சுப்பையின்
சுவாசத்தை - என்
கருப்பைக்கு
இடமாற்றினேன்...!
மிச்சத்தில் தான் - என்
இதயம் துடித்தது....!

என் கருப்பையோ
உன்னை சுமக்க,
என் மனதோ
உன்னை காணும்
ஆசைகளையும்,
உனக்கான - என்
அன்பையும் சுமந்தது...!

முதன் முதலில்
உன்னை என் கைகளில்
ஏந்திய மகிழ்ச்சியை
எப்பொழுது உன்னை பார்த்தாலும்
என் உயிருக்குள் உணர்கிறேன்...!

மூன்று மாதங்கள்...!
மூன்று வயது...!!
முப்பது வயது....!!!
உன் எந்த வயதிலும்
உன்னை தொடும்
சிறு காய்ச்ச்ல் கூட - என்னை
கண்கலங்க வைத்துவிடுகிறது...!

வலிக்காமல் அடிக்க எனக்கும்,
வலிக்காமலே அழ உனக்கும்
நன்கு தெரியும் என்பது
நம் இருவருக்குமே தெரியும்...!

நொடிகள் ஒவ்வொன்றிலும் - நான்
உன் நலமே விரும்புகிறேன்...!
இந்த தள்ளாத வயதிலும்...

முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை
மூன்று மாதத்திற்கு பிறகு
இன்று தான் பார்க்க வந்திருக்கிறாய்...!

தள்ளாடி நடந்தே
வாசல் வரை வந்து - உன்னை
வழியனுப்புகிறேன்...!

மகனே...
பத்திரமாய் சென்று வா...!

காத்திருப்பேன் நான்....!!

அடுத்த ஜென்மத்திலும்
நீதான் எனக்கு மகனாக
பிறக்க வேண்டுமென்ற
வேண்டுதல்களோடு...

----அனீஷ் ஜெ...

2 Nov 2012

இரண்டு நிலாக்கள் !

இரண்டு நிலாக்கள் !


இரண்டு நிலாக்கள்
இரவில் எனக்கு தேவையில்லை...!
வானத்து நிலவே....
வந்த வழியே - நீ
திரும்பிப் போய்விடு...!!
என்னவள்
என்னருகில் இருக்கிறாள்...

----அனீஷ் ஜெ...