30 Sept 2012

சோக கவிதைகள் !

சோக கவிதைகள் !


உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!

அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!

காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...

----அனீஷ் ஜெ...


25 Sept 2012

கண்டுபிடிப்பு !

கண்டுபிடிப்பு !


கற்கள் உரசிக்கொண்டால்
மட்டுமல்ல....
உதடுகள் உரசிக்கொண்டாலும்
தீப்பற்றிக்கொள்ளும்...!
கண்டுபிடித்து சொன்னது
காதல்...

----அனீஷ் ஜெ...


18 Sept 2012

தமிழ் கவிதையாகட்டும்...

தமிழ் கவிதையாகட்டும்...


தமிழின்
வார்த்தைகள் அனைத்தையும்
மிச்சமேதும் வைக்காமல்
மொத்தமாய் உச்சரித்துவிடு...!
அழகு தமிழின்
அத்தனை வார்த்தைகளும்
கவிதைகளாகட்டும்...

----அனீஷ் ஜெ...


14 Sept 2012

அவள் எழுதிய காதல் கவிதைகள் !

அவள் எழுதிய காதல் கவிதைகள் !


இதழ்களின் ஓரம்
ஈரம் வழிய செய்யும்
இனிமையான மொழி...!

வார்த்தைகளில்
தெறிக்கும் உஷ்ணம்...!

ஊமையான
உவமை வரிகளிலும்,
ஆயிரம் சத்தங்களின் சக்தி...!

இருவரிகளுக்கிடையில்
இருவரிகள் அடங்கிப்போகும்
மாயாஜால கோர்வைகள்...!

எத்தனைமுறை படித்தாலும்,
இன்னொருமுறை படிக்கவே
மனம் துடிக்கிறது...!
உதடுகளால் அவள் என்
உதடுகளில் எழுதும்
காதல் கவிதைகளை...

----அனீஷ் ஜெ...

11 Sept 2012

காதல் தோல்வி !

காதல் தோல்வி !


என் இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடும்
உன் நினைவுகளை,
உயிருக்குள் அடக்கிவைத்து
ஊமையாக அழுகிறேன்...!

என் இதயத்தை கிழித்துகொண்டு
வலிகளாய் கசிந்தோடும் - என்
காதல் குருதியை
நெஞ்சோடு மறைத்துவைத்து
செந்தீயில் வேகிறேன்...!

உன் ஞாபகங்களை சுவாசித்து,
உறங்காமல் உனையே யோசித்து,
காதலோடு காலந்தள்ளி,
நீ தந்த வலிகளை ஜெயித்தே
இன்னும் உயிர்வாழ்கிறேன் நான்...!
யாரோ சொல்கிறார்கள்
எனக்கு காதல் தோல்வியாம்...

----அனீஷ் ஜெ...


7 Sept 2012

நிர்வாண நிலவு !

நிர்வாண நிலவு !


இருட்டென்னும் ஆடையை
இழுத்து போர்த்திக்கொண்டு
இரவிலே வருபவள்,
இன்று ஆடை துறந்ததின்
இரகசியம் என்னவோ...?
பவுர்ணமி வானத்தில்
நிர்வாணமாய் நிலவு...

----அனீஷ் ஜெ...



4 Sept 2012

முதல் ரசிகை !

முதல் ரசிகை !


அவளை நிலவென்றேன்...!
அதை ரசித்தாள்...!!
அவளே எனக்கு உலகென்றேன்...!
அதற்கும் சிரித்தாள்...!!
என் கிறுக்கல்களுக்கு கைதட்டி,
என் உளறல்களையும் கவிதையென்று,
என்னை கவிஞனென்ற
என் முதல் ரசிகை அவள்...

----அனீஷ் ஜெ...