அழகான மாலையில் அடிவானம் வரைந்த அரைவட்ட வானவில்..! நதிநீரின் அசைவுகளிலும் நகராமல் கிடக்கும் நிலவின் நிழல்...! முகமெங்கும் இதழ்களால் முனகலோடு உதிரும் மழலையின் புன்னகை...! அடை மழையின் சத்தமும், அதன் குளிரின் வெப்பமும் கலந்த அதிகாலை தூக்கம்...! பனித்துளி பஞ்சை பூக்களாய் சுமக்கும் புல்நுனி கிளைகள்...! இத்தனை அழகையும்
மொத்தமாய் சேர்த்தேன்...! ஆனாலும் அவைகள்
அவளைவிட அழகில்லை...!! ----அனீஷ் ஜெ...
தேவதைகளெல்லாம் சிறகு விரித்து பறக்குமென என்றோ நான் கேட்ட கதை பொய்த்துப்போனது...! நீ நடந்தே வருகிறாய்... வீட்டிற்கு வெளியே வந்துவிடாதே...! பூமியிலும் தேவதையாயென வானம் கீழிறங்கி வந்துவிடப்போகிறது...!! உலர்ந்துகிடக்கும் பூவை உன் விரல்களால் மெல்ல தொடு...! கடவுள்களை போலவே தேவதைகளுக்கும் உயிர்கொடுக்கும் சக்தியிருக்கலாம்...! தேவதையைபோல ஏதோவொன்று வனத்தில் தெரிந்ததென நாளிதழொன்றில் படித்தேன்...! மொட்டைமாடிக்கு நீ சென்று வந்தாயா...? உன்னைக் கண்ட வானத்து தேவதைகள் கடவுளிடம் சண்டையிடுகின்றன...! வெள்ளை நிற உடை வேண்டாம், நீ அணிந்திருக்கும் நீலநிற சுடிதாரை சீருடையாக்கவேண்டுமாம்...! ----அனீஷ் ஜெ...
விழியால் நீ பார்த்தால் பனியாக நான் உருகி பாய்ந்தோடி வருகின்றேன்...! மொழிபேசும் உன் உதட்டில் வெட்கங்கள் தேடி - நான் வெகுதூரம் செல்கின்றேன்...! கொலம்பஸாய் மாறி - உன் தேகத்தில் மிதந்து - புதிய தேசங்கள் தேடுகின்றேன்...! ஆக்டோபஸ் போல - உன் உடல்மேலே பற்றி - உன்னை உணவாக்கி தின்கின்றேன்...! நிலவை நகலெடுத்த - உன் முக இதழ்களில் முத்தங்கள் கொய்கின்றேன்...! உலகை பகல்படுத்தும் சூரியனின் பேரொளிபோல் - உனை சுற்றியே ஒளிர்கின்றேன்...! பறவை சிறகடிக்கும் காற்றிடையிலும் மெல்லிய கவிதைபோல் தொடுகின்றேன்...! இரவை கடைந்தெடுத்த கனவுகளின் வெளிச்சமாய் காதல் தந்து செல்கின்றேன்...! ----அனீஷ் ஜெ...
பெரும் பதற்றத்தோடு வாசலில் காத்திருக்கும் மனிதர்களில்லை...! வலிகளையெல்லாம் வாய் வழியே வெளியேற்றும் அழுகை சத்தமுமில்லை...! மருந்து பெட்டிகளோடு அலையும் மருத்துவர்களுமில்லை...! நலமாயிருக்க வேண்டுமென்ற பிரார்த்தனைகள் இல்லை...! இனிப்பு பெட்டியோடு நிற்கும் நண்பர்களுமில்லை...! ஆனாலும் இன்று பிறந்தது...! காதலொன்று... ----அனீஷ் ஜெ...
எதிரில் நீ வந்தால் என் மனமோ - உன் விழிக்குளத்தில் விழ குதிக்கிறது....! உன் புன்னகை கண்டால் உயிருக்குள் எங்கோ நஞ்சு பரவுவதுபோல நடுக்கம் தெரிகிறது....! கடைக்கண் பார்வை வீசி - நீ கடந்து செல்லும் போது - என் குட்டி இதயமோ கத்தியால் குத்தி கிழிகிறது...! கனவுகள் எனது கழுத்தை இறுக்கும்போது - என் மூச்சுக்காற்றோ - உன் முகம் தேடுகிறது...! நான் உயிர்வாழச்செய்கிறது...! உன்னால் நான் தினம் செய்யும் இந்த தற்கொலைகள்...! ----அனீஷ் ஜெ...