30 Oct 2013

மொக்கை கவிதை !

மொக்கை கவிதை !


நரகாசுரனை கொன்றால்
தீபாவளி...!
தினம் தினம் பார்வைகளாலயே
என்னை நீ கொல்வதை
என்ன பெயரிட்டு அழைப்பது
என்றேன் நான்...!

மொக்கை கவிதை சொல்லியே
தினமும் என்னை கொல்கிறாயே
அதற்கு என்ன பெயரோ
அதேதான் இதற்கும்
என்றாள் அவள்...!!

----அனீஷ் ஜெ...

28 Oct 2013

புதிய முகம் ! புதிய முகவரி !!

புதிய முகம் ! புதிய முகவரி !!


இளமையின் நினைவுகள்
இவர்களால்தான் இன்னும்
இதயத்திற்குள் மிச்சமிருக்கிறது...!

ஆங்கில தேர்வில் முட்டையும்,
ஆசிரியரின் திட்டும்
என்றுமே எங்களை
கவலை கொள்ள செய்ததில்லை...!

முதன்முதலில் குடித்த
திருட்டு பீடியும்,
கடைசியாய் அடித்த
காலாண்டு தேர்வு பிட்டும்
இன்னும் என் நினைவுகளில்...

பட்டன் கிழிந்த சட்டையையும்,
பழைய சோற்றையும் கூட
பரிமாறிக்கொண்டோம்...!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து,
வகுப்பு புகைப்படத்திற்கு
முகம் காட்டி விட்டு,
பள்ளிக்கூடத்தை
பிரிந்து சென்றபோதும் - நம்
நட்பு பிரிந்துவிடுமோ என
சிந்திக்கவில்லை நாம்...!

வாழ்க்கை கடல் ந்ம்மை
வேறு வேறு கரைகளில்
ஒதுக்கி விட்டது...!

ஆண்டுகள் பலவாகிவிட்டது...!

புகைப்படத்தில் ஒட்டியிருக்கும் - உங்கள்
புன்னைகை முகம் காணும்போதெல்லாம்,
என் மனது எங்கேயோ தேடுகிறது...!
மாறிப்போய்விட்ட - உங்கள்
புதிய முகங்களையும்...
புதிய முகவரிகளையும்...

----அனீஷ் ஜெ...

25 Oct 2013

உதட்டுச்சாயம் !

உதட்டுச்சாயம் !


உன் உதடுகளில்
ஒட்டியிருந்த
உதட்டுச்சாயத்தை
என் உதடுகளால்
ஒப்பியெடுத்தேன் நான்...!

உனக்கே தெரியாமல்
உன் முகமெங்கும்
ஒட்டிக்கொண்டது...!!
வெட்கங்கள்...

----அனீஷ் ஜெ...

23 Oct 2013

காதலை என்ன செய்வது...?

காதலை என்ன செய்வது...?


எதிரில் நீ வந்தால்
எகிறிக்குதிக்கும்
என் இதயத்தை,
இட நெஞ்சில் - நான்
இரகசியமாய் மறைக்கிறேன்...!

துடிக்கும் இதயத்தை
மறைத்துவிட்டேன்...!
அதனுள் துடிக்கும்
காதலை என்ன செய்வது...?

----அனீஷ் ஜெ...

21 Oct 2013

19 Oct 2013

14 Oct 2013

சேர்ந்திருந்தால் சுகமே...

சேர்ந்திருந்தால் சுகமே...


நிசப்தங்களாலான - என்
நித்திரையை - உன்
கனவுகளால்
கலகலப்பாக்கினாய்...!

வெறுமையான - என்
வானத்தில்
வானவில்லின்
வன்ணம் சேர்த்தாய்...!

சருகுகள்
சலசலத்த - என்
சாலை பாதையில்
சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!

பேசத்தெரியாத - என்
பேனாவை
கவிதைகள் சொல்லி
கத்த வைத்தாய்...!

உன்னோடு சேர்ந்திருந்தால்
வலிகள் கூட வரமாகும்...!
சோகம் கூட சுகமாகும்...!!

----அனீஷ் ஜெ...