20 Jun 2011

கனவில் வந்த தேவதை !

கனவில் வந்த தேவதை !


தொட்டும் தொடாமலும்,
பட்டும் படாமலும்
ஒரு பார்வை...!

சிணுங்கல் சிரிப்புகளிலும்
கொஞ்சல் பேச்சுக்களிலும்
கவிழ்ந்தே போகிறேன் நான்...!

இறுகி கிடந்த - என்
இதயத்தோட்டத்தில்
இப்பொழுது
பூக்கள் முளைக்கும் சத்தம்...!

அவள் வரும் பாதைகளில்
கால் வலிக்க,
காத்திருக்கச் சொல்லி
கட்டளையிடுகிறது மனது...!

கவிதை மறந்த - என்
பேனாவுக்கு
புதிதாய் இப்பொழுது
முனையொன்று முளைக்கிறது...!

வானவில்லும்,
வானத்தில் தெரியும்
வட்ட நிலவும்
அவளாகவே தெரிகிறாள்...!

என்னை தோளோடு சாய்த்து
ஏதேதோ சொல்கிறாள்...!
என்னை அவள் மார்போடு புதைத்து
காதல் ஊற்றி கொல்கிறாள்...!!

இவளின் காதல் மட்டும்
இப்படியே தொடர வேண்டும்...!

ஏய் கனவே...!
விடிந்ததும் நீ
கலைந்துவிடாதே...!

நான் தொலைக்காமல்
காதலித்துக்கொண்டிருக்க வேண்டும்...!
கனவில் வந்த
இந்த தேவதையை...

----அனீஷ் ஜெ...