சிறகில்லா
தேவதையாய் அவள்...!
எனறோ ஒருநாள்
பேசி மறந்து,
சந்தித்து பிரிந்ததுபோல்
ஞாபகம்...!
பலநாள் பழக்கமென
அருகில் வந்து நலமா என்றாள்...!
கைகால் உதறி,
வாய் உளறி
நலமென்றேன் நான்...!
என் விசாரிப்பை
எதிர்பார்க்காதவளாய்
தொடர்ந்தாள் அவள்...!
அன்று ஏதோ கொஞ்சம் பேசினோம்...!
சில நாள் சந்திப்புக்குபின்
ஏதேதோ பேசினோம்...!
இதயங்கள் இடைவெளி குறைத்து,
காதலாய் கட்டியணைத்தது...!
காதல் பகிர்ந்து,
கவலை மறந்து,
கதை சொல்லி,
இடை கிள்ளி,
இதழ் சுவைத்து,
இதயம் மகிழ்ந்தோம்...!
காரணங்கள் தெரியவில்லை...!
ஏதோ ஒரு நொடியில்
எதற்காகவோ பிரிந்தோம்..!
பின்பு இதுவரை
சந்திக்கவேயில்லை...!
மனம் மட்டும்
அவள் நினைவில்
கனத்துக்கொண்டிருந்தது...!
எதிர் வீட்டு சேவல்,
என்னருகில் அலாரம்
எல்லாமே ஒருசேர கத்த
கண்விழித்துக்கொண்டேன் நான்...!
விழித்த பின்புதான்
விளங்கியது...!
கனவு எனக்கொரு
கதை சொல்லிக்கொண்டிருந்தது...!
எனக்குள் சிரித்துக்கொண்டே
எழுந்தேன் நான்...!
ஆனால்...
நிஜமென்றாலும் கனவென்றாலும்
பிரிவின் வலி பெரியது என
இன்னொரு கதை சொல்லியது...!
எனக்கே தெரியாமல்
என் இமைகளில் ஒட்டியிருந்த
ஒரு துளி கண்ணீர்...
----அனீஷ் ஜெ...