காதல் ததும்பிய
என் இதயத்தை
உன்னிடம் தந்தேன் நான்...!
ஆசையோடு வாங்கிக்கொண்ட நீ
ஆண்டுகள் சில - உன்
அடிநெஞ்சோடு பத்திரப்படுத்தினாய்...!
விரும்பி வாங்கிச் சென்ற
என் இதயத்தை,
திடீரென ஒருநாள்
திருப்பி தர வந்தாய் நீ...!
வாங்க மறுத்தேன் நான்...!
வலிகொள்ளும் என் தெரிந்தும் - என்
பதிலுக்கு காத்திராமல்
தூக்கியெறிந்து சென்றாய் நீ...!
என் இதயத்தை...
சில துண்டுகளாய்
சில்லாய் உடைந்து கிடந்த - என்
சின்ன இதயத்தை கண்டே
சிலகாலம் கண்ணீர் வடித்தேன் நான்...!
காலங்கள் கரைதோடின...
உடைந்து கிடந்த துண்டுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
உதடுகளால் புன்னகைத்தவள்,
ஓரக்கண்ணால் பார்த்தவள்,
எதிரில் எதிர்பட்டவள் என,
அழகான அத்தனை பெண்களுக்கும்
பரிசளித்தேன் நான்...!
பலர் ஏற்றுக்கொண்டார்கள்...!
பாவம் அவர்களுக்கு நான்
காதலனானேன்...!
இன்று கண்ணாடியில்
என் முகம் பார்த்தபோது
எனக்குள் பிரதிபலித்தது...!
என் இதயத்தை
ஏற்றுக்கொண்ட ஒருத்தியிடம்,
பின்பொருநாள் நான் மாட்டிக்கொண்டபின்
அவள் என்னை திட்டிச்சென்ற
பொறுக்கி என்ற சொல்லின் அர்த்தம்....
----அனீஷ் ஜெ...