என் இதயத்தை பறித்து,
உன் இதயத்தோடு
பொறித்து வைத்து
காதலென்றாய் நீ...!
எனக்காகவும் சேர்த்து துடிக்கும்
உன் இதயத்தின் துடிப்பு.
ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் இருந்தாலும்,
எப்பொழுதும் கேட்கிறது
எனக்குள்...
என்னை மனதோடு சுமந்து,
அன்பும் சேர்த்து பகிர்ந்து
அன்னை போலாகினாய் நீ...!
உனக்காய் தான் - நான்
உலகத்தில்
உயிர்கொண்டேன் என - என்
உயிருக்குள் சொல்கிறாய் நீ...!
சாய்ந்து கொள்ள - உன்
மடியிருக்கிறது என்ற
நம்பிக்கையில் தான்
சாகாமல் இன்னும்
மிச்சமிருக்கிறேன் நான்...!
இழப்பதென்பது
இந்த உலகத்தில்
இயல்புதான் என்றாலும்,
உன்னை இழந்தால்
வலுவிழந்த மலர்போல
வாடி உதிர்ந்துவிடும்...!
என் வாழ்க்கை...
----அனீஷ் ஜெ...