30 Apr 2012

காதல் பரிமாற்றம் !

காதல் பரிமாற்றம் !


என் மீசை நுனியில்
மிச்சமிருக்கும் - உன்
உதட்டுச்சாயமும்,
உன் தேகமெங்கும்
மோகம் பாய்ச்சிய
என் எச்சில் ஈரமும்,
தினம் தினம்
சொல்கின்றன...!
காதலில் பரிமாறப்படுவது
இதயம் மட்டுமல்ல என்பதை...

----அனீஷ் ஜெ...

27 Apr 2012

உயிர் பிழைத்திருக்கும் உன் நினைவுகள்...

உயிர் பிழைத்திருக்கும் உன் நினைவுகள்...


துடித்து அடங்கிய
என் இதயத்திற்குள்
இன்னும் உன்
நினைவுகளின் சத்தம்...!

எல்லாம் முடிந்துவிட்டதென
முடங்கிப்போய் கிடக்கும் - என்
மூச்சுப்பையினுள் - உன்
சுவாசத்தின் வாசனை...!

பாய்வதை நிறுத்தி
ஓய்ந்துபோய் கிடக்கும்
என் குருதி துளிகளில்
உன் காதலின் அசைவுகள்...!

இமைகளுக்குள் இருண்டுபோன - என்
பார்வை பகுதிகளில் - உன்
முக நிழலின்
முழுமையான தரிசனங்கள்...!

மரணித்துப்போய்விட்ட எனக்குள்
இன்னும் உயிர்பிழைத்திருக்கிறது...!
மரணிக்காத நினைவுகளாய்
உன் காதல்...

----அனீஷ் ஜெ...

9 Apr 2012

உன் குரல் கேட்க...

உன் குரல் கேட்க...


சிறுசிறு துளியாய்
சில்லென்ன்று பொழியும்
சிறு மழை தூறல் போல் - நீ
சிணுங்கி சிரிப்பாய்...!

கொஞ்சம் மவுன மொழியோடு
கொஞ்சும் காதல் மொழி சேர்த்து
காதல் தடவிய வார்த்தைகளாய் - என்
காதினிக்க பேசுவாய்...!

முத்தங்களோடு சேர்த்து
அதன் சத்தங்களையும்
எனக்குள் விதைப்பாய்...!

உன் வார்த்தைகளிலும்
வெட்கம் தெறிக்கும்...!
உன் மவுனத்தில் கூட
காதல் சுரக்கும்...!!

உன் சிணுங்கள் சிரிப்பு...!
உன் காதல் பேச்சு...!
உன் முத்த மொழி...!
இவையனத்தையும்
இன்று நான்
தொலைத்து நிற்கிறேன்...!

என் உயிரின் காதுகளை திறந்து,
உன்னை தவிர அனைத்தையும் மறந்து,
காத்திருக்கிறேன் நான்...!
மீண்டும் உன் குரல் கேட்க...

----அனீஷ் ஜெ...