3 Jun 2013

முத்தம் எனும் வித்தை !

முத்தம் எனும் வித்தை !


இதழோடு பேசிக்கொண்டே - என்
விரல் நுனியை - உன்
இதழ் நுனியால்
ஈரம் செய்கிறாய்...!

நிலவை காட்டி
நீ எனக்கு இதழூட்டும்
நிலாப்பொழுதுகளை
நினைவூட்டுகின்றன
தென்றல் ஸ்பரிசங்கள்...!

உன் உதட்டுமெத்தையில்
படுத்துறங்க
காத்துக்கிடக்கின்றன - என்
கன்னங்கள்...

உன் இதழோடு
வழிந்தோடும் வெட்கங்களை
நான் தினந்தோறும் - என்
இதழோடு சேமிக்கிறேன்...!

என் கோபங்களை - உன்
எச்சிலால் கரைக்கலாமென
எப்படி தெரியும் உனக்கு...!

நம்
உதடுகள் நான்கும்
உறக்கமில்லாமல்
யுத்தம் செய்யட்டும்...!
முத்தம் எனும் வித்தையால்...

----அனீஷ் ஜெ...