11 May 2013

விரல்களும்... விரல்களும்...

விரல்களும்... விரல்களும்...


குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...

என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!

கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!

நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...

இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!

எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!

இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான் 

மூழ்கி முடியும் வரை...

----அனீஷ் ஜெ...