29 Oct 2012

விளையும் பயிர் !

விளையும் பயிர் !


உன் ஓரப்பார்வையில்தான்
ஆரம்பித்தது....!
உனக்கான என் காதல்...

என் இமைகள் வழியே
உள்ளிறங்கி
என் இதயம் வரை
உள் நுழைந்தாய் நீ...!

உனக்காகவே எதையும் செய்யவும்
அதற்காகவே எதையும் எதிர்க்கவும்
கற்றுக்கொடுத்திருக்கிறது காதல்...!

உன்னுடன் வாழலாம் என
உருவாகிய என் காதல்
உனக்காகவே சாகவும் - என்னை
உருமாற்றியிருக்கிறது...!

மனதில் விதைத்த
காதல் பயிர்
முளைக்குமென்று தெரியும்...!
ஆனால்
காதலென்னும் இந்த பயிர்
விளையுமா என்று
முளையிலே கூட தெரிவதில்லை...!

----அனீஷ் ஜெ...

26 Oct 2012

உன்னை படித்த என் கவிதைகள் !

உன்னை படித்த என் கவிதைகள் !

 

இமை திறந்து இழுத்தாய்...!
எனை மறந்து விழுந்தேன்...!!
விசையா இது தெரியவில்லை...!
விளைவும் எனக்கு புரியவில்லை...!!
விதி எதுவென்று கண்டு சொல்ல
நியூட்டனும் இங்கில்லை...!!!

ஈரிதழ் விரித்து சிரித்தாய்...!
ஈர அமிலமாய் உயிரை எரித்தாய்...!!
உனக்குள் நான் கரைகின்றேன்...!
உன் முன்னாலே உறைகின்றேன்...!!
திடப்பொருள் நான்
திரவமாய் திரிகின்றேன்...!!!

இரவிலும் கனவாய் தெரிந்தாய்...!
இருட்டிலும் நிறமாய் நெளிந்தாய்...!!
நிலவென்கிறேன்...!
நீல வானென்கிறேன் உன்னை...!!
உன்னை சுற்றும்
ஒற்றை கோள் நானாகிறேன்...!!!

என் காதோரம் சிணுங்கினாய்...!
உன் உதட்டோரம் முணுங்கினாய்...!!
உன்னை நான் அணைத்தேன்...!
உடல் தொட்டு எரிந்தேன்...!!
அணைத்தாலும் அணையாத
உன் சூட்டில் புதைந்தேன்...!!!

உன்னை தினமும் படித்தேன்...!
உனக்காய் கவிதை வடித்தேன்...!!
காகிதத்தில் வார்த்தையாகிறாய்...!
கவிதைக்குள் சுவாசமாகிறாய்...!!
என் கற்பனையை கத்தி முனையில்
உனக்காய் கைது செய்கிறாய்...!!!

----அனீஷ் ஜெ...

23 Oct 2012

அழகிகள் கவனத்திற்கு...

அழகிகள் கவனத்திற்கு...


அழகை கண்டாலே
அலைபாயும் வயதெனக்கு...!

ஓரப்பார்வையும்
ஒரு சின்ன புன்னகையுமே
என்னை சாய்த்துவிடலாம்...!

கோபத்தை கொட்டி சென்றாலும்,
திட்டி தீர்த்தாலும்
திருந்த மனமில்லை எனக்கு...!

படிப்பதை வெறுக்கிறேன்...!
ஆனாலும் எனக்கோ
கல்லூரிக்கு வருவது மட்டும்
பிடித்திருக்கிறது....!

நாளை சேர்ந்தே ஊர் சுற்ற
இன்று பின்னால் சுற்றவும்
தயக்கமில்லை...!

முறைத்து பார்த்தாலும்
உறைக்க போவதில்லை எனக்கு...!

கண்களில் பொய்யாய் ஒரு
காதலை பூசிக்கொண்டும்,
வார்த்தைகளில் அழகாய்
இனிமையை தடவிக்கொண்டு,
வந்துகொண்டிருக்கிறேன் நான்...!

இதயத்தை பத்திரப்படுத்திகொள்ளுங்கள்...!
இது அழகிகள் கவனத்திற்கு...

----அனீஷ் ஜெ...

20 Oct 2012

கதைகள் தொடரும்...

கதைகள் தொடரும்...


பாதியிலே பறிபோய்விட்ட
பள்ளிக்கூட காதலின் சுவடுகளை
அடிமனதில் மறைத்துவிட்டு,
ஆறாண்டு இடைவெளிக்குபின்
இன்னொருவளிடம்
இதயத்தை தொலைத்த - என்
இனிய நண்பன்...!

காதலித்தவள்
கைவிட்டாள் என்பதற்காகவே
காதலின் வலிகளை
மதுவில் மறக்க பழகி
கடைசியில் ஒரு
கயிற்றில் முடித்த - தெருவின்
கடைசி வீட்டு அண்ணா...!

காதலித்தவனுடனயே
கடைசி வரை வாழ்ந்து முடிக்க
அப்பா அம்மாவை எதிர்த்து
அவசரமாய் மறைமுகமாய்
மாலை மாற்றிக்கொண்ட
எதிர்வீட்டு அக்கா...!

ஏமாற்றிய காதலியால்
எல்லா காதலும்
போலியென காரணம் சொல்லி
தினம் ஒரு பெண்ணுடன்
சென்னையை சுற்றும்
அலுவலக நண்பன்...!

பத்தாண்டு
திருமண வாழ்க்கையிலே
மொத்தமாய் வெறுத்துபோய்
நீதிமன்ற வாசலிலே
விவாகரத்துக்காய் காத்துகிடக்கும்
பக்கத்து வீட்டு காதல் ஜோடி....!

எண்பது வயதிலும்
திகட்டாத காதலை
தினம் தினம்
பகிர்ந்து வாழும்
மூன்றாம் எண் வீட்டில் வசிக்கும்
மூத்த காதலர்கள்...!

கதலித்ததாலயே
கவிதை எழுத கற்றுக்கொண்ட
நான்....!

காதலின் இந்த
கதைகளுக்கு முடிவுகளில்லை...!
காதலைப் போலவே
காதலின் கதைகளும் தொடரும்...

----அனீஷ் ஜெ...

17 Oct 2012

ஐ லவ் யூ !

ஐ லவ் யூ !


செல்ல சண்டைகளின் முடிவில்
என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும்
சின்ன கோபங்களை
உன் உதடுகளால் ஒப்பியெடுக்கிறாய்...!

மிச்சமிருக்கும் கோபமும் - நீ
என் காதில் முனங்கும்
ஒற்றை வரியில்
ஒரேடியாய் மறைந்தே போகிறது...!

அன்பே...
மீண்டும் ஒருமுறை - நான்
பொய் கோபத்தோடு இருக்கிறேன்...!
என் கன்னத்தோடு
உன் உதடுகளை உரசி,
என் காதோடு
ஒருமுறை சொல்லிவிடு...!
ஐ லவ் யூ என்று...

----அனீஷ் ஜெ...


14 Oct 2012

10 Oct 2012

கண்ணாடி மனது !

கண்ணாடி மனது !


உன் கண்ணாடி மனதோடு
என் கண்ணெறிந்தேன் நான்...!

உன் வெட்கங்கள் உடைந்து
என் எதிரே
சிறு புன்னகையாய்
சிதறியது....!

உடைந்து கிடந்த
உன் புன்னகை துகள்களை
என் கைகளோடு அணைத்து
எடுத்துக்கொண்டேன் நான்...!

வலியே இல்லாத
வலிமையான முனைகொண்டு
அவைகள் என்
இதயத்தை கிழித்தன...!
காதலாய்...

----அனீஷ் ஜெ...



7 Oct 2012

மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...

மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...

  
மூச்சை அடக்கி
மூழ்குகிறேன் நான்...!

சலனங்கள் கூட எனக்குள்
சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது...!

மூச்சு காற்று கூட
புயலாய் தான் - என்னை
புரட்டிப்போடுகிறது...!

தத்தளிக்கிறேன் நான்...!
ஆனாலும்
தடுமாற்றமில்லை எனக்கு....!

கரைதொடும் முயற்சியில்
கரைந்தோடும் எனக்குள்,
வரைமுறைகள் இல்லாத
அரைகுறை எண்ணங்கள்...!

முழுதாய் நான்
மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...!

பெண்ணே...!
விடிந்தபின்னாவது
கரை சேர்ந்து விடுவேனா..?
உன் தேகக்கடலில்
மூழ்கிக்கிடக்கும் நான்...

----அனீஷ் ஜெ...