கனவில் வந்த தேவதை !
தொட்டும் தொடாமலும்,
பட்டும் படாமலும்
ஒரு பார்வை...!
சிணுங்கல் சிரிப்புகளிலும்
கொஞ்சல் பேச்சுக்களிலும்
கவிழ்ந்தே போகிறேன் நான்...!
இறுகி கிடந்த - என்
இதயத்தோட்டத்தில்
இப்பொழுது
பூக்கள் முளைக்கும் சத்தம்...!
அவள் வரும் பாதைகளில்
கால் வலிக்க,
காத்திருக்கச் சொல்லி
கட்டளையிடுகிறது மனது...!
கவிதை மறந்த - என்
பேனாவுக்கு
புதிதாய் இப்பொழுது
முனையொன்று முளைக்கிறது...!
வானவில்லும்,
வானத்தில் தெரியும்
வட்ட நிலவும்
அவளாகவே தெரிகிறாள்...!
என்னை தோளோடு சாய்த்து
ஏதேதோ சொல்கிறாள்...!
என்னை அவள் மார்போடு புதைத்து
காதல் ஊற்றி கொல்கிறாள்...!!
இவளின் காதல் மட்டும்
இப்படியே தொடர வேண்டும்...!
ஏய் கனவே...!
விடிந்ததும் நீ
கலைந்துவிடாதே...!
நான் தொலைக்காமல்
காதலித்துக்கொண்டிருக்க வேண்டும்...!
கனவில் வந்த
இந்த தேவதையை...
----அனீஷ் ஜெ...
காதல் நவரச நாயகன் ,. கவிதை அருமை ..
ReplyDeleteநீண்டநாள் ரெஸ்ட் எடுத்தமையால், கிட்னி நல்லா வேலை செய்யுது, அழக்காக கவிதை உருவாகியிருக்கு.. அதுக்கு முதலில் வாழ்த்துக்கள். இப்போ உடலும் உள்ளமும் நலம்தானே கவிக்கா?
ReplyDeleteசே...சே...சே.. வாழ்க்கையில சந்தேகமே படக்கூடாது எனும் கொள்கையோடு வாழ்ந்துவரும் என்னை, இக் கவிதை சந்தேகப்பட வைத்துவிட்டுதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteஎங்கேயோ இடிக்குதே கவிக்கா... என்ன ஆச்சு?:))).. கவிதை உண்மையானால் அனைவருக்கும் மகிழ்ச்சியே... பப்பி வெயார் ஆ யூஊஊஊஊஊஉ:R
கவிஞர் இப்பொழுது ரொம்ப சோம்பேறி ஆகிவிட்டாரா. கவிதை எழுதுறதே இல்லயே. :Y
ReplyDeleteகனவு பகலில் கண்டீர்களா இரவில் கண்டீர்களா? இரவில் என்றால் வந்தது தேவதையா இல்ல பேய் பிசாசா என பார்க்கவும். :B ஹிஹி
வழக்கம் போல கவிதை சூப்பர் :C கனவும் கவிதையும் தொடரட்டும் :X
@அரசன் : ரொம்ப நன்றி தல...
ReplyDelete@athira : ஹாஹா இந்த கவிதை எழுதுறதுக்கு முன்னாடி மட்டுமல்ல.. கவிதை எழுதிய பின்பும் ரெஸ்ட் எடுதிருக்கிறேன்... ;)
ReplyDeleteஹ்ம்ம்ம் உங்க சந்தேகம் எனக்கு புரியுது...:U இப்படி எல்லாம் சந்தேகப்படபிடாது... ஹ்ம்ம்ம் கவிதை உண்மைதான்.. ஆனா கவிதையில் வந்திருக்கிற தேவதைதான் பொய்... :))
உடலும் உள்ளமும் இப்பொழுது நலமே... கருத்துக்கும் விசாரிப்புக்கும் ரொம்ப நன்றி... :)
@Monika : சோம்பேறி ஆயிட்டனா? என்ன இப்படி புதுசா ஆன மாதிரி கேக்குறீங்க? நான் பிறக்கும் போதே சோம்பேறிதான்... ;) ஹ்ம்ம்ம் வேறு சிலபல காரணங்களால்தான் எழுதவில்லை...
ReplyDeleteகனவு இரவில் தான் கண்டேன்.. வந்தது பேய் பிசாசா? :U அப்போ ஒருவேளை உங்க முகம்தான் கனவில் பார்த்திருப்பனோ...? :Q ஹாஹா சும்மா தமாசு... :)) கனவு தொடராவிட்டாலும் கவிதை தொடரும்... கருத்துக்கு மிக்க நன்றி மோனிகா...:)
eppodum kanavu dana....?
ReplyDelete@anishka nathan : ஹ்ம்ம்ம் ஆமா எப்போதும் கனவு தான்...! என்ன பண்றது? தேவதை கனவிலயாவது வாறாளேனு சந்தோஷப்பட்டுக்கு வேண்டியதுதான்...! :R:R:R:R:R
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி !! :)
Intha devathai kidaika vaazthukkal...
ReplyDeleteKalakureenga...!
:)
@Kaavya: வாழ்த்துக்கும், வருகைக்கும் ரொம்ப நன்றி...!!! :)
ReplyDeleteboss nalla irukku...
ReplyDeletevidinjathukku appuramum kanavu kanduttae eruntha puvaakku enna pannurathu,,,,,,,,
yaru soru poduvaa..yaru kulambu koduppa...
boss only dreams in nightu...worku in morningu .........
@Anonymous: சரி சரி அதுக்காக நீங்க அழாதீங்க... ;)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)