நான் உன்னை காதலிக்கிறேன்...
எத்தனையோமுறை
என் வழிகளில்
எதிர்பட்டிருக்கிறாய் நீ...!
ஆனால் இப்பொழுதுதான்
அதிசயமாய் அடிக்கடி என்
விழிகளில் விழுகிறாய்...!!
உன்
பார்வை மழைக்காகவே
பாலைவனமாகிறது மனது...!
உன்
புன்னகையை பிடித்து
பூக்கள் செய்ய - நான்
புதிதாய் கற்றுக்கொள்கிறேன்...!
கண்கள் திறந்தே
கனவு காண்பதும்,
உறக்கத்திலும்
உன்னை நினைப்பதும்,
எனது புதிய அனுபவங்கள்...!
எந்த பார்வை
என்னை சாகடிக்கிறதோ,
உந்தன் அதே பார்வைதான் - என்
உயிரையும் வளர்க்கிறது...!
உனக்காய் காத்திருக்கும்
என் கால்கள்,
ஒவ்வொருமுறையும்
உன்னை நோக்கி
பயணிக்கும்போதும்,
என் இதயம்
சத்தமில்லாமல்
உரக்க கத்துகிறது...!
நான் உன்னை காதலிக்கிறேன்...
----அனீஷ் ஜெ...
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...!
ReplyDeleteஇயேசு பெருமான் காட்டிய அன்பும், சமாதானமும் இந்த இனிய நாளில் உங்கள் இதயங்களில் பிறக்க வாழ்த்துகள்...! :)
happy
ReplyDeletemerry
cristmas
to all friend
@Anonymous: உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...!
ReplyDelete//எந்தப் பார்வை
ReplyDeleteஎன்னை சாகடிக்கிறதோ,
உந்தன் அதே பார்வைதான்-என்
உயிரையும் வளர்க்கிறது...!//
அருமையான காதல் உணர்வு.காதலை உணர்ந்து மிக அருமையாக கவி வரைந்திருக்கிறீர்கள்.நன்று.
அனைத்து உறவுகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
happy chirstmas to u and ur family.....
ReplyDeleteyenga athukku munndai kannu theriyaama iruunthathaa ....
ReplyDeletepunnaikailaa pookkalaa --nice
idayam urakkaa kaththuthaaaaa ....paavamnga unga pakkathula irukkavanga ....
good
@சித்தாரா மகேஷ்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeleteஉங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...! :)
@கலை: //yenga athukku munndai kannu theriyaama iruunthathaa ....//
ReplyDeleteகண்ணு தெரியும்...! but எதிரில்வரும் எந்த பொண்ணையும் சைட் அடிக்குறதில்ல...! அவ்வளவு நல்ல பையன்ங்க நான்... :R:R:R:R:R
//idayam urakkaa kaththuthaaaaa ....paavamnga unga pakkathula irukkavanga .... //
நல்லா வாசிங்க... அது சத்தமில்லாமல் உரக்க கத்துறது... அது யாருக்கும் கேக்காதுங்க... ;)
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...! :)
கவிக்கா இது எத்தனையாவது காதல்?:R:R:R:R:R:R:R:R:R
ReplyDeleteகவிக்காவைக் காணல்லே... எண்ணப் போயிட்டார்போல.. நான் காதலைச் சொன்னேன்.... ஹையோ நானில்ல நானில்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....:R:R:R:R:R:R:R:R:R:R:R
ReplyDelete@athira: நீங்க இவ்வளவு கட்டாயப்படுத்தி கேக்குறதால, உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்றேன்...! என்னோட கணக்குபடி இது 1256-வது காதல்... ஒருவேளை முன்னபின்ன இருக்கலாம்...! :A:A:A:A:A
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி...!
@athira: அதெப்படி கரீட்டா கண்டுபுடிச்சீங்க...? ரொம்ப அதிகம் இருக்குறதால எண்ணி முடிக்குறதுக்கு ரொம்ப லேட் ஆயிடிச்சு...! :R:R
ReplyDeleteநன்றி...! :)
5ம் நம்பர் உங்களுக்கு லக்கி நம்பர்போல:) அதனாலதான் 1256... :A:A:A:A:A:A:A:A:A:A
ReplyDeleteசரி சரி முறைக்கப்பிடா... கவிக்காவின் காதல் வாழ்க!!!!!!!
@athira: ஹாஹா எப்படிங்க இப்படி? கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க... 1256 போட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு... ஆனா அது 5-ம் நம்பர் லக்கி அப்படினு இல்ல... அதுமாதிரியே வேற ஒரு காரணம்...! :p
ReplyDeleteஇருந்தாலும் நீங்க இவ்வளவு புத்திசாலியா இருக்ககூடாது... ;)
நன்றி...! :)
@athira: என் கவிதைகளின் நிறைகளை பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டியும் நீங்கள் கொடுத்த 100 பின்னூட்டங்களுக்கு ரொம்ப நன்றிங்க...! :)
ReplyDeletemigavum alagana eluthu vadivam.....
ReplyDeletemiga alagana ezhuththu nadai.....
ReplyDeleteஅடடா 100 க்கு வந்திட்டேனோ:)? அதுக்கு ரொம்ப நன்றி மட்டும் “சொகமா” இருந்து சொல்லிட்டால் ஓக்கேயோ? 100 க்கு வர எவ்ளோ உழைப்பு உழைத்திருப்பேன் எனத் தெரியுமோ? உப்பூடி சிம்பிளாச் சொல்லிட்டீங்களே...:((:((:((:((:((...
ReplyDeleteஅங்கயாவது யூஜின் வந்து என்ன எனக் கேட்பார்.... இங்க அழுதா ஆரும் கேட்கமாட்டினமாம்.... இன்னும் கொஞ்சம் சத்தமா அழுது பார்ப்பம்:((:((:((:((:((:((:((:((:((:((
இன்னுமொன்று சொல்ல மறந்திட்டேன், அதெதுக்கு கடற்கரையில நிக்க வச்சு காதலைச் சொல்லுறீங்க? சொன்ன கையோடு சுனாமி அள்ளிட்டுப் போகப்போகுதுங்கோ..:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R
ReplyDelete@kalpana: வாங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)
@athira: வேற எப்படி சொல்லணும்னு சொல்றீங்க..? அப்படியே சொல்லிக்குறேன்...! :U:U இதுக்காக எல்லாம் அழாதீங்க... பேசி தீர்த்துகலாம்...:A
ReplyDeleteசுனாமியா? :B:B வாழ்த்துறத விட்டுட்டு இப்படியா சொல்லணும்...! :(:( :S:S
நன்றி.... :)
good poem
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeleteஇப்படி உரக்க சொன்னா “அவங்க” பயந்துட மாட்டாங்களா?
ReplyDeleteகவிதையில் நளினம் நிறையவே உள்ளது ...
ReplyDeleteகாதலை எந்த முறையிலும் சொல்லலாம்.. அதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறை இல்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க ..
உங்க கவிதையும் அழகு ... அந்த காதலைப்போல ....
வாழ்த்துக்கள் தல....
super anish.. nice..
ReplyDelete@ராஜி: இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு நீங்க ஏங்க என்னை பயமுறுத்துறீங்க..? :B
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
@அரசன்: வாங்க தல...! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
@kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDelete