நான் + நீ = காதல் !
கட்டுப்படுத்த தெரியாமல்
கரைபுரண்டோடும் கோபம்...!
ரசிக்க வைக்கவும் - சிலசமயம்
சிரிக்க வைக்கவும் செய்யும் பேச்சு...!!
இவைகள் சேர்ந்தால்
அது நான்...
ஆயிரம் நிலவுகளை
அள்ளியெடுத்து சேர்த்த அழகு...!
அதிகம் பேசாத
ஆர்ப்பாட்டமில்லா அமைதி...!
அத்தனையும் சேர்ந்தால்
அதுதான் நீ...
நான்...!
நீ...!!
நாம் இரண்டும் சேர்ந்தால்
காதல்...
----அனீஷ் ஜெ...
aaakaaaa...
ReplyDeleteநான் நீ ரொம்ப சூப்பர்ர்... ஏன் அந்தக் கோபத்தைக் கொஞ்சம் குறைச்சால் என்ன?:)
ReplyDeleteஆஹா... கலக்கிட்டிங்க...
ReplyDeletereally a beautiful poem ever read
ReplyDelete