இதழோடு பேசிக்கொண்டே - என்
விரல் நுனியை - உன்
இதழ் நுனியால்
ஈரம் செய்கிறாய்...!
நிலவை காட்டி
நீ எனக்கு இதழூட்டும்
நிலாப்பொழுதுகளை
நினைவூட்டுகின்றன
தென்றல் ஸ்பரிசங்கள்...!
உன் உதட்டுமெத்தையில்
படுத்துறங்க
காத்துக்கிடக்கின்றன - என்
கன்னங்கள்...
உன் இதழோடு
வழிந்தோடும் வெட்கங்களை
நான் தினந்தோறும் - என்
இதழோடு சேமிக்கிறேன்...!
என் கோபங்களை - உன்
எச்சிலால் கரைக்கலாமென
எப்படி தெரியும் உனக்கு...!
நம்
உதடுகள் நான்கும்
உறக்கமில்லாமல்
யுத்தம் செய்யட்டும்...!
முத்தம் எனும் வித்தையால்...
----அனீஷ் ஜெ...
ரசிக்க வைக்கும் முத்த வித்தை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆஹா..ஆஹா.. என்னா ஒரு கற்பனை... நிஜமாக வாழ்த்துக்கள்..:R:R:R:R:R:R
ReplyDeleteபப்பி கெதியா ஓடு..:)
hmm very romantic
ReplyDeleteமுத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை. கொடுப்பதை விட வாங்குவது ரொம்ப கடினம். முதல் கோணல் முற்றிலும் கோணல் .முதல் முத்தமே செயற்கையானால் அடுத்த முத்தம் வர வழியில்லை. இயல்போடு மனதுடன் ஒன்றிய முத்தம் மன மகிழ்வினைத் தந்து உறவை வளர்க்கும். அது அழகைக் கூட்டி ஆயுளை அதிகமாக்கும்.
ReplyDeleteகுழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப் பாருங்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
nice kavithai anish..
ReplyDeleteகலக்குறீங்க :)
ReplyDelete