தனிமையில் நிற்கிறேன் நான்...!
கடந்து செல்வோர் பலர்
காரணம் கேட்டு நகர்கின்றனர்...!
துரோகமெனும் வெயிலும்
ஏமாற்ற மழையும் - என்
உயிர் எரித்து நனைக்கிறது...!
கதறி அழ நினைத்தாலும்
கண்ணீர் துளிகளை
இமைகளுக்கிடையில்
இறுக்கி பதுக்கிக்கொள்கிறேன்...!
காலங்கள் கடந்து சென்றாலும் - என்
கால்கள் கடக்க வழி தெரியவில்லை...!
மனம் கனக்கும் - உன்
நினைவு பொதியுடன்
தனிமையிலே நிற்கிறேன் நான்...!
நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்...
----அனீஷ் ஜெ...
வலி
ReplyDeleteஅனுபவித்தவனுக்குத் தான் தெரியும்..வலியின் அவஸ்தை..
ReplyDeleteLove is Dangerous
ReplyDeleteவெளிவராத வலியும்வந்துதித்தது விரலில்எவ்வளவு இறுக்கத்தைதான்தாங்கும் இதயம்
ReplyDeleteநானும் தனிமையில்தான் நண்பா
ReplyDeleteI like t
ReplyDeleteRompa kashta patura bro
ReplyDeleteI love this kavithai
ReplyDeleteதனிமையில் இருக்கிறது கண்கலில் கண்ணீர் வரவில்லை.
ReplyDelete