14 Mar 2011

முடியாத காதல் பயணம்!


அன்றொருநாள்...

சாலையோர பூங்காவில்
என் விரல் பிடித்து
நடந்துகொண்டிருந்தாய் நீ...

நீ அதிகம் பேசுவதில்லை...!

அமைதியின்
அடையாளங்களை
முழு நேரமும்
முகம் முழுவதும்
பூசி வைத்திருக்கிறாய்...!

உன்
மவுனங்களை உடைக்க
எப்பொழுதும் நான்
மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது...!

எப்போதாவது வரும்
என் கோப கனல்களும்
உன் கண்ணீர் துளி பட்டு
உருதெரியாமல் அழிந்துபோகிறது...!

ஒரே ஒருமுறை
உன் கோப முகத்தை
பார்க்க ஆசைப்பட்டு
ஒவ்வொருமுறையும் - நான்
தோற்றுப் போகிறேன்...!

காதலிக்க தொடங்கி
காலங்கள் பலவாகிவிட்டது...!
நீயோ இன்றுவரை
என் பேச்சுக்கும்
என்றுமே எதிர்ப்பை காட்டியதில்லை...!

ஆச்சரியமானவள்தான் நீ...!

என் வலிகளுக்கும்
உன் கண்கள் தான்
கண்ணீர் விடுகின்றன...!
என் கவலைகளுக்கு
உன் வார்ததைகள் தான்
ஆறுதலாகின்றன...!

என்னை அன்பு செய்வதைதவிர
எதுவுமே உனக்கு
தெரியாது என்றே
நினைக்கிறேன் நான்...!

உன்னை நான் சந்தித்தது
என் முற்ஜென்மத்தின்
பலனாகக்கூட இருக்கலாம்...!

உன்னை இழந்தால்
என் இதயம்
உடைந்தே போய்விடும்...!

என் விரல் பிடித்த
உன் கைகளை
இப்பொழுது நான்
இறுக பிடித்துக்கொண்டேன்...!

என் வாழ்கை முழுவதும்
உன்னோடு சேர்ந்து
நான் பயணிக்கவேண்டும்...!
முடியாத - ஒரு
காதல் பயணம்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. படிக்க இனிமையாக இருக்கு... முடிவுதான் கனக்கிறது.

    வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்தால் பயணம் சுகமானதுதான், ஆனால்

    “வேண்டாம் என்று வெட்டி அகற்றிய வேர்களை, கட்டுப் போட்டுக் காப்பாற்றவா முடியும்?”

    ReplyDelete
  2. அருமையான வரிகள் நண்பரே ரசித்தேன்

    ReplyDelete
  3. @athira: உண்மைதான்...!
    மிக்க நன்றி...!!

    ReplyDelete
  4. @தமிழ்தோட்டம் : ரசித்தமைக்கு மிக்க நன்றி தலிவா...!!

    ReplyDelete
  5. thala ( david billa) kalakureenga...

    ReplyDelete
  6. @sunil: ரொம்ப நன்றி பாஸ் :)

    ReplyDelete
  7. eppadi oru kadalan kidaital vazhkai swargam aayi vidum

    ReplyDelete
  8. @anishka nathan: இப்படி ஒரு காதலி கிடைத்தாலும் வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்... :) ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  9. "Ennai anbu seivathai thavira ethuvumey unakku theriathu endrey ninaikiren naan"
    Intha varigal romba Arumai Anish...
    Kalakureenga...!
    :X :C :X

    ReplyDelete
  10. @Raja Mohamed : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி பாஸ்...! :)

    ReplyDelete
  11. @Kaavya : வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete