உன் முன்னுரை - என் முடிவுரை
நம்பிக்கைகள்
உடைக்கப்படும்போது
கீறல் விழும்
மனசு எனும் கண்ணாடி...!
கனவுகள்
கலைக்கப்படும்போது
வெற்றிடமாகும்
வாழ்க்கை பக்கங்கள்...!
அழ வைத்து
அனுபவங்களை கற்றுதரும்
அர்த்தமில்லாத
வாழ்க்கை பாடங்கள்...!
நிலவை தொலைத்த
அமாவாசை பொழுதுகளாய்,
இருட்டாகிப்போகும்
இதய அறைகள்...!
இப்பொழுதும்
வலிகளை சுமந்து
கனத்துப்போன
அதே இதயத்தோடு
தனிமையில் நான்...!
அளவுக்கு மீறிய அன்பு
இன்னும்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது...!
விழிகளின் ஓரங்களில்...
பழையதாகிப் போனதென
நீ கசக்கி எறிந்த
என் ஞாபக குப்பைகளில்
இன்னும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
கரைந்து போன - உன்
காதலின் அடையாளங்களை...
உன் நிராகரிப்புகளால்
நிரபராதியான என் உணர்வுகள்
தினம் தினம்
தூக்கில் தொங்குகின்றன...!
மலராய் உன்னை - என்
மனதோடு அணைத்திருந்தேன்..!
முள்ளாய் நீ என்னை
முழுதாய் காயப்படுத்தினாய்...!
நடை பிணமாகிவிட்ட
நம்பிக்கைகள் - இன்னும்
உயிருடன் இருப்பதாக சொல்லி
கல்லறையை காட்டுகிறாய்..!
உன்னில் நான் காணும்
நான் விரும்பாத மாற்றங்கள்,
என் மனதை
மரண நிலைக்கே
எடுத்து சென்றுவிடலாம்...!
கடைசியாய் இன்னொருமுறை,
ஒரே ஒரு முறை
யோசித்துக்கொள்...!
எதற்கோ - நீ
எழுதும் முன்னுரை,
எனக்கு
முடிவுரையாக கூட மாறி விடலாம்...!
----அனீஷ் ஜெ...
why always negative thoughts for lovers they should thinl possitive also
ReplyDeleteஅதுதானே எப்பவும் பொஸிடிவ்வாக யோசியுங்க, கிட்னியை யூஸ் பண்ணுங்க... முடிவுரை அல்ல.. ஆரம்பமே இனித்தான்... என நினைக்கோணும்.. அனுபவங்கள்தானே... வாழ்க்கையில ஒருவர் முன்னேற உதவும் ஏணிகளில் ஒன்று...
ReplyDeleteகவிதை வழமைபோல கலக்கல்!!!!!
ReplyDeleteகலக்கல் வரிகள்..
ReplyDeleteஇப்பொழுதுதான் உங்கள் வலைப்பூவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. ஒருமணி
ReplyDeleteநேரமாக உட்க்கார்ந்து உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்துவிட்டேன்.
என்ன சொல்வதென்றோ, எப்படி பாரட்டுவதென்றோ தெரியவில்லை. இப்பொழுதே உங்கள்
கவிதைகளுக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்.
பெரும்பாலான கவிதைகள் காதலைதான் பாடுகின்றன. கவிதைகளின் வரிகள்
ஒவ்வொன்றிலும் காதலின் முதிர்ச்சி தெரிகிறது. ரொம்ப ரசித்து
காதலித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் :-)
சில கவிதைகள் சிரிப்பை தந்தாலும், பல கவிதைகள் விழிகளில் நீர் வர
வழிசெய்கிறது. முழுக்க முழுக்க எதார்தங்கள் வரிகளாகியிருப்பது உங்கள்
கவிதைக்கு கூடுதல் பலம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் உங்கள் வலைப்பூ
’அருமையான கவிதைகளின் பொக்கிஷம்’
இக்கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் சில நினைவுகளையும், வாழ்க்கையின்
ReplyDeleteவிரக்தியையும் காட்டுகிறது. மேலும் சிறந்த கவிதைகளை படைக்க
வாழ்த்துக்கள்.
anishka nathan
ReplyDelete????????????
ReplyDeleteஎன்னே அருமையான வரிகள்
ReplyDeleteஉங்கள் கவிதைகளும் முடிவுரை காணாமல், முற்றுப்புள்ளி இல்லாமல், தொடர வாழ்த்துக்கள்
வலிகள் கொண்டது தான் வாழ்க்கை .வலி கண்டு தான் வாழ்வு வழி பிறக்குமாம். இன்னும் வாழ வாழ்க்கை இருக்கிறது ..ஒரே கட்டையில் சுழலும் செக்கு மாடுபோலன்றி மீண்டு வாருங்கள் வாழ்ந்துபாருங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி !!
ReplyDeletevery nice...
ReplyDeleteenna comment eluthurathuney therila...
Kalakureenga...!
:)
புல்லரிக்க வச்சிட்டீங்க M.சங்கர் ரொம்ப நன்றி :)!!
ReplyDelete:) anishka nathan
ReplyDelete:) athira
:) தமிழ்த்தோட்டம்
:) M.சங்கர்
:) அழகி
:) நிலாமதி
:) Kaavya
அனைவருக்கும் ரொம்ப நன்றி...!!