ஒரு மழைப்பொழுதில்,
ஒற்றைக்குடையில்
நீயும் நானும்...
குடையில் மோதியதில்
மழைத்துளிகள்
உடைந்து சிதறிக்கொண்டிருந்தது...!
மீதி மழைத்துளிகள்
உடலின் பாதியை
நனைத்துக்கொண்டிருந்தாலும்,
குடை இன்னும் கொஞ்சம்
சிறியதாய் இருந்திருக்கலாம் என்றே
நான் நினைத்துக்கொண்டேன்...!
இத்தனை அருகில்
இதற்கு முன் உன்னை நான்
இப்படி ரசித்ததில்லை...!
உன்னை தோளோடு
அணைத்துக்கொண்டேன்...!
மழைத்துளிகள்
நீர் தெளிக்க
உன் முகம்
வெட்கக்கோலம்
போட்டுக்கொண்டிருந்தது...!
மழையும்
நமது இந்த பயணமும்
இப்படியே தொடராதா என்றேன் நான்...!
மழை இப்படியே தொடர்ந்தால்
மழையில் அப்படியே மூழ்கிவிடுவோம்
எனச்சொல்லி சிரித்தாய் நீ...!
அந்த சிரிப்பில்
இன்னொருமுறை
காதலில் மூழ்கி எழுந்தேன் நான்...
இடி மின்னைலை கண்டு
உனக்குள் வந்த பயம்,
நமக்கிடையில் இருந்த
இடைவெளியை
இன்னும் குறைத்தது...!
இடியை இன்றுதான்
எனக்கு பிடித்திருக்கிறது...!
காற்று மழையிலும் - உன்
காதல் மழையிலும்
நனைந்தபடியே ஒரு பயணம்...!
வீட்டிற்கு வந்ததும்,
ஈரம் காய்வதற்காய்
குடையை
விரித்து வைக்கும்வரை
மனசு
சிறகை விரித்து
பறந்துகொண்டிருந்தது..!
என் அறையில் இருக்கும்
அந்த குடை
ஆண்டுகள் பலவானாலும் - இப்போதும்
அடிக்கடி
என் கண்ணில் படுவதுண்டு...!
தூசி படிந்திருக்கும்
அந்த குடையை
அடிக்கடி
துடைத்து வைக்க - நான்
என் கையில் எடுக்கிறேன்...!
அன்று உலர்த்தி வைக்கப்பட்ட
அந்த குடை
நான் கையில் எடுக்குபோதெல்லாம்
ஈரமாகிவிடுகிறது...!
என் கண்ணீர் துளிபட்டு...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
நெஞ்சைத்தொட்டுவிட்டது கவிதை...
ReplyDelete“இக் குடைக்குள்
இப்போ ஒரு குட்டியும்
சேர்ந்திருக்கிறது எம்
காதலின் சின்னமாய்”.....
இப்படி ஒரு முடிவு வந்திருந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருந்திருக்கும்... உங்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் எமக்கும்தான்... ம்ஹூம்ம்ம்ம்ம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
anda kudai kudutu vechueruku hmmmmmmmmmmmmm
ReplyDelete@athira: நன்றி...!
ReplyDeleteகுடை பத்திராமா இருக்கிறதாமே...!
மீண்டும் அந்த குடை விரியலாம்...! அப்போது “குட்டி”யும் சேரலாம்...! அந்த ஆனந்த முடிவுக்காய்... :)
@anishka nathan: கருத்துக்கு நன்றி...!
ReplyDeleteசே...சே...சே... அந்தக்குடை வாணாம், இனிப் புதுக்குடை வாங்குங்க கவிக்கா:).
ReplyDeleteஹ்ம்ம்ம் புதுகுடை வாங்கணும்...! மழை வருதா என் பார்க்கணுமே... :)
ReplyDeleteella kavithayum nalla irukuma illa neenga eluthura kavithai mattum nalla irukumaa...?
ReplyDeleteenna solrathuney theriala... ungaloda ella kavithailayum final twist romba pudichuruku Anish...
Kalakureenga...!
:) :) :)
@Kaavya : கவிதை மொக்கையா இருந்தா கூட பரவாயில்லை, ஆனா மற்றவர்களை போல எழுதக்கூடாதுனு நினைக்கிறேன்...! என்னுடைய கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கும் போதே, கவிதையின் முடிவு இப்படி தான் இருக்கும்னு யாரும் ஊகிக்க முடியாம இருக்கணும் என விரும்புறேன்...! அதானால் தான் பெரும்பாலும் கவிதைகளில் கடைசியில் அந்த டிவிஸ்ட் வருது...! என்னுடைய கவிதைகளில் 60% கவிதைகள் அப்படிதான் இருக்கும்... அப்படி எழுதுறதைதான் நானும் விரும்புறேன்...! :) என்னை பொறுத்தவரை எல்லாரையும் போல எழுதி, நல்லா எழுதுறதை விட, மொக்கையா எழுதினாலும் வித்தியாசமா எழுதுறதுதான் பெட்டர்...! :X
ReplyDeleteகருத்துக்கும் ரொம்ப நன்றி... :) கலக்கல் தொடரும்... :):):):):)