25 May 2011

எல்லாம் நிறைவேறிற்று...


விஷங்களை சுமந்த
புன்னைகையோடு
எதிர்படும்
மனித முகங்கள்...!

சுயநலங்களோடு
சுயம்வரம் நடத்திவிட்டு,
காதலிப்பவரையே
கல்லறைக்கு அனுப்பும்
காதல் கொலையாளிகள்...!

பிணம் தின்னும்
கழுகுகளைவிட,
கொடூர முகங்களொடு
சில பணம் தின்னும்
மனிதர்கள்...!
கரன்சி நோட்டுக்கு
கைகால் முளைத்திருந்தால்
கட்டிலில் கூட அதையே
கட்டியணைத்திருப்பார்கள் இவர்கள்..!!

தூக்கிப்போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொல்வதும்,
சாதாரணமாய் செய்யும்
அசாதாரண பிறவிகள்...!
நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்...!!
ஆச்சரியமில்லை...!!!

காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்...!
என்
கண்ணிர்துளிகளை
கங்கை நதியாக்கி - அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்...!

பொய்கள் கோர்த்த
வார்த்தை வலையில்
மாட்டிக்கொண்டே மரணிக்கிறது...!
மனது...

சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
எனது உயிர்...

கருவறைக்கும்
கல்லறைக்குமான
எனது தூரம்
சின்னதாய்
சுருங்கிப்போகிறது...!

கடைசி வாக்குமூலங்கள்
கவிதைகளாய்
கையொப்பமிடுகின்றன...!

கண்ணுக்கெட்டாத தூரத்தில்,
யாரும் இல்லாத தனிமையில்
நான் மறைந்து போக வேண்டும்...!

உடைந்த கனவுகளும்,
அதிக வெறுமைகளும்,
நிறைய ஏமாற்றங்களும்தான்
கடைசியாய் என்னிடம்
மிச்சமிருக்கின்றன...!

எல்லாவற்றையும்
அள்ளிக் கட்டிக்கொண்டு
இப்போதே நான்
பயணமாக வேண்டும்...!
ஏனெனில்
எல்லாம் நிறைவேறிற்று...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

9 comments:

  1. கண்டுபிடிங்க:)May 26, 2011 2:25 pm

    ஏனிந்தக் கொலை வெறி கவிக்கா?:).

    அது சரி எல்லாம் நிறைவேறிட்டுதோ? அவ்வ்வ்வ்... உண்மைதான் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.... இருப்பதை விட்டுவிட்டு பறப்பதுக்கு ஆசைப்படக்கூடாது....

    பின்பு வாறேன் மிகுதிக்கு...

    ReplyDelete
  2. கண்டுபிடிங்க:)May 26, 2011 2:26 pm

    வித்தியாசமான ஒரு படைப்பு, அழகாக இருக்கிறது..... நான் சொன்னது கவிதையை மட்டும்தான்....

    ReplyDelete
  3. கவிதையை அட்டகாசமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். நமக்கு முன்பே தென்படும் பெரும்பாலான மனிதர்களின் எதார்த்த முகங்கள் கவிதை வரிகளில் தெரிகிறது. குறிப்பாக
    /சுயநலங்களோடு
    சுயம்வரம் நடத்திவிட்டு/
    கண்ணிர்துளிகளில் முழ்கி எழுந்து சிரிக்கிறார்கள்/ இதெல்லாம் மிக நன்று.

    ஆனால் கவிதை கடைசியில் எப்படியோ முடித்திருக்கிறிர்கள் :-(
    நம்மை சுற்றி இருக்கும் கெட்டவர்களை அடையாள்ம் கண்டு தூக்கிபோட்டுவிட்டு, நமது நன்மை நினைப்பவர்களோடு நடந்தால் எல்லாம் நிறைவேறும். நன்மையாக............ :)

    வித்தியாசமான கவிதை. நன்றாக இருக்கு.

    ReplyDelete
  4. அதிரா:)May 30, 2011 3:05 am

    ஐ.....கவிக்கா... சூப்பரா இருக்கே இது.... பூஸாரும் இருக்கிறார்... தப்பிஓட பப்பிதான் இல்லை....:T:T:T

    =))

    ReplyDelete
  5. really superb:)

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி !!

    ReplyDelete
  7. ansish no words to say.............
    wonderful,,wonderful....wonderful...
    ovvoru linesum semayaa irukku.... if u dont mine anisnh neenga yarukkugaga ezhthinangalae antha girl must read this anish....

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி !!

    ReplyDelete
  9. அருமை அருமை

    ReplyDelete