என்
எண்ண கனவுகளில்
வண்ணங்களை
வாரி இறைத்தவள் நீ...!
என்
மூச்சுப்பையின்
மூலையில் எங்கோ - என்
முதலும் முடிவுமாய்
நிறைந்துகிடப்பவளும் நீதான்...!
உன் மவுனத்தின் குரலையும்,
உன் மனதின் காதலையும்,
கலந்தெடுத்துதான்
கவிதை நெய்கிறேன் நான்...!
உன்னை நிலவென்று
நான் பொய் சொல்வதும்,
நீ என் உயிரென்று
நான் உன்னை கொஞ்சி கொல்வதும்,
நீ ரசித்த நிகழ்வுகளாய்
உன் ரகசிய நினைவுகளில்...
முத்தம் கேட்டால் - நீ
முதலில் மறுப்பதும்,
இன்னொன்று கேட்டால்
இரு கண்களால் முறைப்பதும்,
ஆயிரம் முத்தங்களின்
ஆரம்பமாகிவிடுகின்றன...!
உன் குரல் கேட்கும் தருணங்களும்,
உன் விரல் பிடித்த பயணங்களும்
இன்னும் நீளச் சொல்லி
என்னை கேட்கிறது என் மனது...!
ஆயிரம் ஜென்மங்கள் - நான்
அவதரித்து வந்தாலும்,
நீதான் வேண்டுமென
நியாயம் பேசுகிறது என் இதயம்...!
உன்னை இழந்தால் - நான்
பிழைப்பதற்கு வழியேயில்லை...!
ஏனென்றால்,
என் இதயத்தோடு துடித்து
என்னுள்ளே பரவிக்கிடக்கும்
என் ஒற்றை உயிர் நீ...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
so powerful lines :))v nice
ReplyDeletevery nice Anish...
ReplyDeleteKalakureenga...!
சூப்பர்ப்ப்ப்ப்ப் :C
ReplyDelete@anishka nathan: மிக்க நன்றி
ReplyDelete@Kaavya: ரொம்ப நன்றி
ReplyDelete@Monika: ரொம்ப நன்றிங்க
ReplyDeleteஆயிரம் ஜென்மங்கள் அவதரித்து வந்தாலும் suppppppppppppppppper lines. love our language.
ReplyDelete@sowmiya: கருத்துக்கு ரொம்ப நன்றிங்க !
ReplyDeleteanishj payangarama romantic kavithai ponga...
ReplyDeletevery nice anishj
@Anonymous: ஓ அப்படியா? :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)