19 Sept 2011

கோயில் வாசலில்...


பிறந்ததிலிருந்தே
தேடிப்பார்க்கிறேன்...!
கால்கள் இரண்டையும்
காணவில்லை...!!
கையும் ஒன்றுதான்...!
இன்னொன்றை தேடவில்லை...!

இறைவன் தந்ததோ
இருபது விரல்கள்...!
எனக்கு இருப்பதோ
ஐவிரல்கள்தான் ஆகமொத்தம்...!

இரு கரங்கள் இருந்தும் - எனக்கு
ஆதரவு கரம் தர யாருமில்லை...!
இரக்கமில்லாத இதயங்கள்...!!

உழைக்கவும்,உணவுக்கும்
எனக்கு வழியில்லை...!

குப்பைதொட்டியே
எனக்கு உணவூட்டியது...!
கூரையில்லா குப்பைமேடு
எனக்கு கூடாரமானது...!!

பசியை தவிர,
அதிகமாய் எதையும்
ரசித்ததில்லை நான்...!

அன்றொருநாள்...
என் பார்வையில் பட்டது...!
அந்த வழியருகில் இருந்த
கோயில் வாசல்...

என்னைப்போலவே அங்கு
ஏராளமானோர்...!

சிலருக்கு விழியில் ஒளியில்லை...!
பலருக்கு உடலில் சில உறுப்பில்லை...!!

வருவோர் போவோரெல்லாம்
விட்டெறிந்து போயினர்...!
மதிப்பில்லாமல் மரித்துபோன,
பழைய சில்லறைகளை...!

அவமானமாக தெரியவில்லை...!
அவர்களோடு நானும் உட்கார்ந்தேன்...!

என் முன்னிலும் இப்பொழுது
சிந்ததொடங்கியது...!
சில்லறைகள்...

கூச்சல் போட்டு,
கூவி அழைத்தாலும்
குறைந்த சில்லறைகளே கிடைத்தது...!

கூட்ட நெரிசலான
கோயில் வாசலிலும்,
யாரும் கண்டுகொள்ளவில்லை...!
எங்களை...

பக்தியோடும்,
பணக்கட்டுகளோடும்
காத்திருந்தனர்...!
கடவுளை தரிசிக்க...

எடைக்கு எடை தங்கத்தால்
கடவுளுக்கு கொடை கொடுக்க,
காணிக்கை பெட்டிக்கோ
மூச்சு முட்டியது...!

பாவம் தீர்க்கும் கடவுள்
இப்போது
பணக்காரனாய்
காட்சி தந்தான்...!

காணிக்கையால்
கல்லாய் வீற்றிருந்த
கடவுளை குளிப்பாட்டி,
ஆசி கிடைத்த திருப்தியோடு
திரும்பிக்கொண்டிருந்தது...!
பக்தர் கூட்டம்...

இப்போதும் வழக்கம்போல்
கைநீட்டினேன்...!
முகம் சுழித்துக்கொண்டே
பைக்குள் கைவிட்டு
விட்டெறிந்தனர்...!
வழக்கம்போல் சில்லறையை...

உண்டியலுக்கு
உணவுகொடுக்கும் இவர்கள்,
எங்களுக்கு ஒருவேளை
உணவு கொடுத்தாலென்ன...!

யோசித்தவாறே திரும்பிபார்த்த நான்
அவனை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்...!

என்னருகில் உட்கார்ந்து,
முன்னிலொரு துணிவிரித்து,
ஒரு முடவனாய்
கைநீட்டி காசு கேட்டுக்கொண்டிருந்தான்...!
கடவுள்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. wowwwwwwwwwwwwwwwwww kovil vasal kannu munnadi teriyardu aandavan enge? hmmm vasalile wowwwwwwwwwwwww gr888888

    ReplyDelete
  2. கவிதை மிக அருமை ...நண்பரே...

    ReplyDelete
  3. கோயிலில் கண்ணை மூடுவோம்
    பல உண்டிகளில் பணத்தைப் போடுவோம்
    பிச்சைகாரனிடம் சண்டை பிடிப்போம்
    -ம. ரமேஷ் லிமரைக்கூ

    ReplyDelete
  4. கோடி கோடியா நம்மாளுங்க கோவில்ல பதுக்கினாலும், கடவுளுக்கு வந்த நிலை??? என்ன கொடும சார் இது!! கவிதை அருமை நண்பா!!

    ReplyDelete
  5. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  6. @ரெவரி: கருத்துக்கும் நன்றி நண்பா !

    ReplyDelete
  7. @ம.ரமேஷ்: கருத்துக்கு நன்றி நண்பா !

    ReplyDelete
  8. @sowmiya: அதே அதே... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  9. solla varththai illai...manasu kanakkuthu

    ReplyDelete
  10. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  11. @Edwin Singh: ரொம்ப ரொம்ப நன்றி ந்ண்பா...!! :D:D

    ReplyDelete