10 Oct 2012

கண்ணாடி மனது !


உன் கண்ணாடி மனதோடு
என் கண்ணெறிந்தேன் நான்...!

உன் வெட்கங்கள் உடைந்து
என் எதிரே
சிறு புன்னகையாய்
சிதறியது....!

உடைந்து கிடந்த
உன் புன்னகை துகள்களை
என் கைகளோடு அணைத்து
எடுத்துக்கொண்டேன் நான்...!

வலியே இல்லாத
வலிமையான முனைகொண்டு
அவைகள் என்
இதயத்தை கிழித்தன...!
காதலாய்...

----அனீஷ் ஜெ...



SHARE THIS

10 comments:

  1. எப்படி தல .. இப்படில்லாம் ...
    அசத்தல் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல வரிகள்... கண்ணாடி மனதை உடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  3. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… தொடர்கிறேன்...

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
  4. @Seeni: வாங்க நண்பரே...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. @அரசன் சே: வாங்க தல... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...! :)

    ReplyDelete
  6. @Ayesha Farook: கண்டிப்பா.... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @Anonymous: cool...

    வருகைக்கும், தலையை முட்டியமைக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. @திண்டுக்கல் தனபாலன்: வாங்க.... கண்டிப்பாக வருகிறேன்... :)

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete