மழை இரவின்
பெரும்தூக்கமும் தராத சுகம்...!
வெயில் நாளில்
மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!
கடும் தாகத்தில்
குட நீரும் தீர்க்காத தாகம்...!
தென்றல் தொட்ட பொழுதில்
தேகமும் உணராத புத்துணர்சி...!
நகைச்சுவை நிரம்பிய
திரைப்படமொன்று வழங்காத புன்னகை...!
இவையெல்லாம் எனக்கும்
நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!
நீ எனக்கனுப்பும்
“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...
----அனீஷ் ஜெ...
குறுஞ்செய்தி அருமை கவிக்கா.
ReplyDeleteநலம்தானே?:).
Deleteஹாய் ! நான் நலம்... நீங்க நலமா? முந்தின கவிதைக்கு நீங்க போட்ட கமெண்ட் இப்போதான் பார்த்தேன். எப்படி மிஸ் ஆச்சுனு தெரியல. மன்னிச்சு :-/ கொஞ்சம் பிஸி... அதானல உங்க பக்கம் வழியா வரவும் முடியல :-|