
அடைக்கப்பட்ட கதவாய்
அவளின் இதயம்...!
திறக்கப்பட வேண்டி
திரிகின்றேன் நான்...!
மறைக்கப்பட்ட அவளின் மனதின்
அறையொன்றிற்கு அப்பால்
புறக்கணிக்கபடுவதற்கான ஏற்பாடுகள்...!
மறுக்கப்பட்ட காதலும்
மரத்துப்போன மனதோடும்
மறப்பதற்கான வழிகள் தேடி நான்...!
மறக்க நினைக்கும்
மரண நொடிகளில்
பிறப்பெடுக்கும்
வலிகளை வரிகளாக்கி
ஒரு கவிதை எழுதினேன் நான்...!
கவிதையின் வரிகளுக்கிடையில்
காதலொன்று மரித்துக்கொண்டிருந்தது...!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
Nice sir..
ReplyDeleteகவிதையை படித்த கணங்களில் என் கண்கள்கண்ணீர் சிந்தியது,,கல்லாய்போன அவள் மனதை நினைத்து.
ReplyDelete