பார்த்து பார்த்து
கவனம் ஈர்த்து,
பின்தொடர்ந்து,
பின்பொருநாள் காதலை சொல்ல
அன்றிலிருந்து இதயத்தில்
ஒற்றிக்கொண்டேன் நான் உன்னை...!
குறுகுறு பேச்சும்,
சிறுசிறு முத்தமும்,
மிகப்பெரும் சண்டையும்,
அதில்பெரிய அன்புமாய்
காதலை வளார்த்தோம் நாம்...!
அம்மா அழுதது,
அப்பா திட்டியது,
அண்ணன் அடித்தது என
ஏதோ ஒரு காரணத்திற்காய்
உனை விட்டு பிரிந்தேன் நான்...!
துரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி
தூரம் சென்றுவிட்டாய் நீயும்....!
உனக்காய் நான் அழுத
என் இரவுகளின் சத்தங்களை - நீ
கேட்டிருக்க வாய்ப்பில்லை...!
நீயும் அழுதிருப்பாய்...!
உன் புதுமனைவியுடன்
உன்னை என் தோழி,
கடைத்தெருவில் கண்டதாய்
கண்டுவந்து சொன்னாள் இன்று...!
நீ நலமாகத்தான் இருக்கிறாயாம்...!
உன்னை தவறவிட்டதாய்
கதறி அழ தோன்றியது எனக்கு...!
உயிர்கொல்லும் வலிகளுமாய்
உயிர்வாழ பழகிவிட்டாலும் சிலசமயம்
மனதில் நினைத்துக்கொள்கிறேன்...!
என்னை பார்த்த அந்த
முதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்...
----அனீஷ் ஜெ...
Written By : Anish J.
Requested By : Varshini.
நல்ல கவிதை.
ReplyDeletenice
ReplyDeleteநண்பா உங்கள் கவிதை என் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பல உணர்வுகளை தூண்டுகிறது
ReplyDeleteமிக்க நன்றி