காகிதத்தில் - உங்கள்
காதலின் கண்ணீர்களால்
ஈரம் செய்வேன்...!
ஆணியே அறைந்தாலும்
அதை சிறுமுள்ளின் வலியென
ஆறுதல் சொல்வேன்...!
சருகுகளை சிலசமயம்
பூக்களென்பேன்...!
தேனென்று நீங்கள் சொல்வதை
விஷமென்றும் வாதிப்பேன்...!
கனவுகளின் கதைகளை
கவிதையாக்குவேன்...!
இமையென்னும்
ஜன்னல் திறந்தால்
எனக்கு பிரபஞ்சமே தெரிவதாய்
எண்ணிக்கொள்வேன்...!
சோகங்களையும் நினைவுகளையும்
சேகரித்து வைப்பேன்...!
நீங்கள்
சிரிப்பீர்களோ,
சிந்திப்பீர்களோ,
கண்ணீர் வடிப்பீர்களோ,
கசக்கி எறிவீர்களோ - இதில்
ஏதாவது ஒன்றை
என் பேனாவாலேயே சாதிப்பேன்...!
ஏனென்றால்
நான் கவிஞன்...
----அனீஷ் ஜெ...
s. u r...............
ReplyDeleteஅற்புதமான விளக்கம்
ReplyDeleteமிகக் குறிப்பாக ஜன்னல் வழி
பிரபஞ்சம் காண்பது...
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிதை அருமை நண்பரே.
ReplyDelete