25 May 2016

ஞாபகமிருக்கிறதா?


சிரிப்பை நான் மறந்து
சிலநாட்களாகிவிட்டது...!

குழிவிழுந்த கண்களில்
கண்ணீரின் ஈரம் கசிகிறது...!

விடாது பேசிக்கொண்டிருப்பதை
விட்டுவிட்டேன் நான்...!

எவர் திட்டினாலும்
ஏனென்றுகூட கேட்பதில்லை...!

ஒட்டிய கன்னங்களை
ஒத்துக்கொள்ளவில்லை முகம்...!

நட்பு உறவு என்று எதையுமே
நம்பதோன்றவில்லை இப்போது...!

ஓ...
கேட்கவே மறந்துவிட்டேன்...

ஞாபகமிருக்கிறதா என்னை...?
அடையாளமாவது தெரிகிறதா...??

சிலகாலம் முன்பு 
உனக்கு நான் உலகமாயிருந்தேன்...!

---அனீஷ் ஜெ...
SHARE THIS

6 comments:

  1. அட்டகாசம் சகோ. அதுவும் கடைசி இரு வரிகளும் மொத்த கவிதைக்கே உயிர் கொடுத்துவிட்டது.

    ReplyDelete
  2. கவியரசுDecember 12, 2016 6:39 pm

    நானும் உன்னைப்போலவேதான்...

    ReplyDelete
  3. இது உண்மையான நிகல்வு.இந்த வரிகள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவைகள்.

    ReplyDelete
  4. last two lines..killing ...super ji...

    ReplyDelete