அடிவானம்
அழகான மஞ்சளை
முகம் முழுக்க
பூசிக்கொண்டிருந்தது...!
இருட்டுக் கல்லறையில்
சூரியன் மெல்லமாய்
புதைந்துக் கொண்டிருந்தது...!
கதிரவனின்
கடைசி ஒளி பட்டதில்
எதிரே தெரிந்த எல்லாமே
தங்கமாய் மின்னின...!
ஒரு
வெற்றுக் காகிதத்தை - என்
கையில் திணித்துக்கொண்டு
கவிதை எழுத சொன்னாள் அவள்...!
அழகான
அந்த காட்சியை
பேனா தூரிகையால்
வரிகளாக்க வேண்டினாள் அவள்...!
காதலும் நானும்
கவிதையின் எந்த வரியிலும்
கலந்துவிடக்கூடாது என்ற
கட்டளை வேறு...!
உன்னை தவிர
எதைப்பற்றியும் - எனக்கு
எழுத தெரியாது என்ற என்னை
செல்லமாய் முறைத்தாள் அவள்...!
மாலை நேரம்...!
சூரியன்...!!
நிலா...!!!
இவை எதுவும்
என் வரிகளுக்குள் சிக்கவில்லை..!
நொடிகள்
நிமிடங்களாக நகர,
என் எண்ணம் மட்டும்
அவளை சுற்றியே
அலைகிறது...!
இன்னும் நகராமல்...
அவளின்
சுவடுகளை சுமக்காமல் - இதுவரை
எந்த கவிதை வரிகளையும்
என் பேனா பிரசவித்ததில்லை...!
இது எனக்கு
புதிதாயிருந்தது...!
அடிவானம்...!
அழகு சூரியன்...!!
ஏதேதோ கிறுக்கினேன் நான்...!
எழுதி முடித்து
ஒருமுறை வாசித்த போது
வரிகள் ஏனோ
மனதில் ஒட்டவில்லை...!
என் பேனாவே
என்னை பார்த்து
திட்டுவதுபோலிருந்தது...!
நான் கிறுக்கியவைகளில்
கவிதையின் சுவை
காணாமல் போயிருந்தது...!
காகித கிறுக்கலை
அவளிடம் நீட்டினேன்...!
மவுன மொழியில் வாசித்தாள்...!
வாசித்து முடித்த அவளிடம்
எப்படியிருக்கு
என கேட்டேன்...!
கவிதை நல்லாயிருக்கு என்றவளிடம்
கவிதையா? என
ஆச்சரியமாய் கேட்டது...!
என் கண்கள் இரண்டும்...
மவுனமாய் சிரித்தாள் அவள்...!
ஒருவேளை
என் கிறுக்கல்கள் கூட
கவிதையாயிருக்கலாம்...!
அவள் வாசித்த பின்பு...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
beautiful kirukalgal enaku dan purium:))
ReplyDelete@anishka nathan: ஓஓஓ...? அப்போ உங்களுக்காக கிறுக்குபவர் கொடுத்துவச்சவர்தான்...! :) ரொம்ப நன்றி...!
ReplyDeleteஉண்மைதான் கிறுக்கல்களும் கவிதைகளாகும்... கவிக்காவின் கிறுக்கல்களும்தான்....
ReplyDelete@athira: ஹை... நன்றி! நன்றி!!
ReplyDeleteRomba nalla irukuthu Anish... Kalakureenga...!
ReplyDelete:) :) :)
@Kaavya : ரொம்ப நன்றி...! :)
ReplyDelete