31 Jan 2011

எங்கிருந்தோ நான்...


மாலை நேரம்...!
மணி ஐந்து...!!

கரை மீது கொண்ட
காதலால்
கடற்க்கரையை
கட்டியணைத்துக் கொண்டிருந்தது...!
கடல் அலை...

அந்த கடற்க்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்...!
நான்...

எப்போதும்
எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ -நான் வந்து
இருபது நிமிடமாகியும் காணவில்லை...!

யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்...!

முழுநிலவாய் மின்னும் -அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ
குறை தெரிந்தது...!

என்
பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்...!

எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது...!

அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்...!

அவள் கண்களுக்குள்
கண்ணீர் துளி...!
என் இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...!!

கண்ணீர் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்...!
மவுனமே பதிலாய் கிடைத்தது...!!

இன்னொருமுறை கேட்டேன்...!
இப்போதும் மவுனமே பதிலானது...!!

அரைமணி நேரம்
அதே மவுனம்...!
அதற்க்குள்
ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது....!!
என் இதயம்...

அரைமணி நேரம் கழிந்து
அவள் வாய் திறந்தாள்...!

என்னை நீ
மறந்துவிடு என்றாள்...!
மறுத்தேன் நான்...!!

நீதான் என் உயிர் என்றவள் -இப்போது
நீங்கிப்போக சொல்கிறாள்...!
மரணம் உன் மடியில் என்றவள் -இப்போது
மறந்து போக சொல்கிறாள்...!!

இதயத்திற்க்குள்
இடி தாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு...!!

என்
உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது...!
கண்கள்
கண்ணீர் துளிகளாய் பேசியது..!!

விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்...!
விலகி நடக்க தொடங்கினாள்...!!

தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்...!

என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது...!

அன்றிலிருந்து இரண்டாவது நாள்...

அவள் வீடு...

அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள். ..!

அதன் ஆறாவது பக்கம்...
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்...!
அருகில் என் புகைப்படம்...!!
அலறினாள் அவள்...!!!

பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்...!

ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்...!
மூச்சு நின்று
மூன்று நாட்க்களாயிருந்தது...!!

அரைமணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்...!

உயிரில்லாத என்னை கண்டு -அவள்
உடலே நடுங்கியது...!
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்...!!

ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்...!

மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்க்காய்
மன்னிப்பு கேட்டாள்..!

என்னை கட்டி அணைத்தப்படி
விட்டுப்போகாதே என அழுதாள்...!

எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்....!
ஓ... கடவுளே...!
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான்
உயிரோடிருந்திருக்க கூடாதா....

----அனீஷ் ஜெ...
SHARE THIS

40 comments:

 1. வரிகள் விழிகளை நனைத்து விட்டது
  கவிதையை வாசித்துவிட்டு வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன் கவிகாதலா
  நண்பா அருமை மிக அருமை

  ReplyDelete
 2. சூப்பர் கவிக்கா, சொல்ல வார்த்தையில்லை...

  காதலிக்கக்கூடாது, ஆனால் காதலில் மூழ்கியபின் இப்படி வார்த்தையே வரக்கூடாது..
  ///அரைமணி நேரம் கழித்து
  அவள் வாய் திறந்தாள்...!
  என்னை நீ
  மறந்துவிடு என்றாள்...!///

  இதில் வர்ணித்திருக்கும் காதலன் அவசர முடிவெடுத்திட்டார்.... போராடியிருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கலாமோ???.

  மொத்தத்தில் அனைத்து வரிகளும் “வலிநிறைந்த அழகு”.

  ReplyDelete
 3. ஆ.... ஜலீலாக்கா நீங்களா???

  ReplyDelete
 4. @அ.செய்யது அலி: இது நான் ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதிய கவிதை. அப்போது எழுதி முடித்து வாசித்த போது பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை. இப்பொழுது மறுபடியும் படித்த போது என் மனதும் வலிக்கிறது...!
  உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா...!!!

  ReplyDelete
 5. @athira: பாரட்டுக்கு மிக்க நன்றி...! ஆம் காதலில் மூழ்கிய பின்பு இது போன்ற வார்த்தைகள் வர கூடாதுதான்...
  மறந்துவிடு என்று சொன்ன பெண்ணிடம், மீண்டும் காதலை பெற போராடுவது முட்டாள்தனமானது அல்லவா..?

  நன்றி...!!!

  ReplyDelete
 6. @Jaleela Kamal: பாரட்டுக்கு மிக்க நன்றி...!

  ReplyDelete
 7. //அவள் கண்களுக்குள்
  கண்ணீர் துளி...!
  என் இதயம் இப்போது
  மவுனமாய் அழுதது...!! //


  அருமையான வரி...சோக கீதம்

  ReplyDelete
 8. என்ன கதைக்கிறீங்க கவிக்கா... மனதால விரும்பிக் காதலித்த பெண் வந்து, மறந்துவிடு எனச் சொன்னவுடன், உடனேயே விட்டுவிடுவதா?

  அது, அப்பெண் ஏதாவது பயத்தினால், அடுத்தவரின் மிரட்டலால், ஏன் அனுபவக் குறைவால்கூட சொல்லியிருக்கலாமே தவிர, எடுத்த எடுப்பிலேயே அது அவரின் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தையாக எடுக்கக்கூடாதல்லவா... அது வெறும் உதட்டு வார்த்தைதான்....

  மீண்டும் மீண்டுm சொன்னால் ஓக்கே. விட்டிடத்தான் வேண்டும். உண்மையை விசாரித்து தெளிவானபின் விடலாம்.

  நண்பர்கள்கூட அப்படித்தான் தப்பித் தவறி ஒரு வார்த்தை எமக்கு எதிராகக் கதைத்திட்டால் அப்படியே பழசை எல்லாம் மறந்து உடனேயே வெட்டு ஒன்று துண்டாக்கிட முடியுமோ? முடியாதல்லவா....

  நான் இப்பூடித்தான்....

  ReplyDelete
 9. ஆ... ஜெய்ய்ய்ய்

  ReplyDelete
 10. @ஜெய்லானி: மிக்க நன்றி ஜெய்லானி !!!

  ReplyDelete
 11. @athira: ஹ்ம்ம்ம்... நீங்கள் சொல்வது சரிதான்...!! ஆனால் உயிருக்குயிராய் நேசித்த பெண் ஒருமுறை மறந்து விடு என்று சொன்னாலே மனசு உடைந்துவிடும் தானே...

  ReplyDelete
 12. superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  ReplyDelete
 13. Gayathri மிக்க நன்றி...!!!

  ReplyDelete
 14. touched my heart...tears rolled down..

  ReplyDelete
 15. @anishka nathan: ரொம்ப நன்றி :)

  ReplyDelete
 16. Really got tears while reading it Anish...
  Avaruku uyir pizhaikanumnu aasa padra alavuku avlo arumaiya eluthirukeenga...
  Kalakureenga...!
  :X :C :X

  ReplyDelete
 17. @Kaavya : ஹ்ம்ம்ம்ம்ம் :((
  வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

  ReplyDelete
 18. Love is lovable pain, i feel that while i read these lines.

  ReplyDelete
 19. @Gopi : ரொம்ப நன்றி...!!! :)

  ReplyDelete
 20. @rajs27: ஓஓ :(( :(( வந்தமைக்கும், கவிதைகளை ரசித்து வாசித்தமைக்கும், உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :D

  ReplyDelete
 21. மிக அருமையான வலி நிறைந்த வரிகள் நண்பா :((

  //"என்னை கட்டி அணைத்தபடி விட்டுப்போகாதே என அழுதாள்எனக்கே தெரியாத ஏதோ ஓரிடத்திலிருந்து நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான் எனக்குள் நினைத்து கொண்டேன் ..ஓ கடவுளே இந்த ஜென்மம் முழுவதும் இவளோடு வாழ நான் உயிரோடு இருக்ககூடாதா .."// இந்த வரிகள் காதலின் ஆழத்தை உணர்த்துவதாய் இருந்தது

  ReplyDelete
 22. @ravi: வந்தமைக்கும், கவிதையை ரசித்தமைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா !! :)

  ReplyDelete
 23. enna anish ippadi eluthittinga...
  ethirparkkatha vazhi,,,
  manasum kanathuruchchi anish

  ReplyDelete
 24. @Anonymous: சரி சரி ஃப்ரீயா விடுங்க... வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ! :)
  அப்படியே உங்க பெயரையும் சொல்லிட்டு போங்க...:)

  ReplyDelete
 25. அப்படி அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சி...

  குடும்ப சூழ்நிலையா ?

  திருமணம் ஆகிவிட்டதா ?

  என்ன ஆனது ?

  by

  livina

  ReplyDelete
 26. @Anonymous: எதற்கு இத்தனை கேள்விகள்..? :U

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 27. @raji: முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 28. ULAGILEYE MIGA
  AZAHANA MOZHI "MOUNAM"
  AZAGU ENDRUME ABATHU ENBADHAI
  MARANDHU, IRANDHA KADHAL!!!

  KAVIDHAI SUPERA IRUKKU BOSS:X

  ReplyDelete
 29. @sowmiya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

  ReplyDelete
 30. வலி பெற்ற வரிகள்...உயிரோடு இருந்தாலும் சில சமயங்களில் மனம் விரும்பும் சொந்தங்களுக்கு ஆறுதல் கூற முடியாமல்.....ஏதோ ஓரிடத்தல் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது..இறந்த மனதை அணைத்தபடி......அருமை கவிஞரே

  ReplyDelete
 31. @Athisaya: உண்மைதான் அதிசயா...

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 32. Toch my heart my my brother.

  ReplyDelete
 33. @palanivel.s: ஹ்ம்ம்ம்ம்

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா...! :)

  ReplyDelete
 34. super bro....this is joen frm halos

  ReplyDelete
 35. @Joen Milton: Thanks boss.. :)

  ReplyDelete
 36. இந்த காதல் உண்மையாகவே வெற்றி பெற்று விட்டது..!!!

  ReplyDelete
 37. neenga anupavasaali......nga..
  ungal kavithaiyai parthathu en kangal thaan...

  yeno theriyavillai .....!!!!!
  kalangukirathu en nenjam

  its a very beautiful..

  ReplyDelete
 38. Good one.. I decided once this.. But I haven't do... Still I lives for my love with her sweet memories.. I should I forget my love. I love my lover lot after she leaves me..

  ReplyDelete