23 Nov 2011

ஆறாம் விரல்...


தீண்டிப்பார்க்கும் மனது...!
தூண்டில்போடும் வயது...!!

தொட்டுவிட்டதாலென்னவோ
விட்டுவிட மனமில்லை...!

உணர்ச்சிகளுக்கு
உணவு கொடுக்க,
விரல்களுக்கிடயில்
இருப்பிடம் கொடுத்தேன்...!

இன்பத்தின் இருப்பிடத்தை
பற்ற வைத்ததும்,
இரத்தம் சூடேறியது...!

உயிர் மூச்சு
உள்ளே வர,
வெள்ளை மழை
வெளியேறியது...!

ஏதோ சுகத்திற்குள்
சுருண்டுகொண்டேன்...!

ஆறாம் விரலாய் இது
அடிக்கடி முளைக்க,
அதற்கு நானும்
அடிமையாகி போனேன்...!

விளைவுகளை அறிய
விருப்பமில்லாமல்,
இன்றும்
பற்ற வைத்துக்கொண்டிருக்கிறேன்...!
என் ஆயுளை அபகரிக்கும்
இந்த சிகரெட்டை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

25 comments:

  1. தல நீண்ட நாள் கழித்து அக்கறையுள்ள சமூக கவிக்கு வாழ்த்துக்கள் ..
    அனைவருக்கும் போய்சேர வேண்டிய கவிதை ..

    ReplyDelete
  2. @அரசன்: ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  3. உதட்டோடு உறவாடி
    உயிரை உறிஞ்சும்
    உன்னத பணி(?) செய்யும்
    ஆறாம் விரலின்
    அடிமைதனத்திற்கு
    அதனாலேயே சூடு வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. anish kavithai super .....

    adimai aagi vaelivara villai nnu solluvathu nice...aanal innum konjam cigarte smoking vilaivugal add panni payamuruththi solli irukkanumnnu ninaikkiraan ...

    smoke pannura ungal maari aalugal ithai padichchavathu thirunthanum anish...

    ReplyDelete
  5. @கோகுல்: வாங்க கோகுல்...!
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. romba palagi veruthu ponatho illai virumbiyathal vantho.. but super.. nalla varigal

    ReplyDelete
  7. @kalai: கல்லூரிகாலத்தில் எழுதிய இந்த கவிதை என் கல்லூரி நண்பர்கள் சிலருக்கு favourite கவிதை...! அதற்கு மிக முக்கிய காரணம் இருக்கு...! அது என்னனு படிக்கும் 1% பேருக்குதான் புரியும் என நினைக்கிறேன்...! மற்றபடி இந்த கவிதை மூலமா யாரையும் திருத்தணும்னு எனக்கு ஐடியா இல்லை... யார் யாரோ சொல்லி பயப்படாதவங்க, நான் சொன்னா மட்டும் பயந்திடவா போறாங்க...?

    ”என்னை மாதிரி” ஆட்கள் ஸ்மோக் பண்ணுவதை நிறுத்தணும் என நீங்க நினைக்குறது சரிதான்...! But அதற்கு முன்னாடி ”என்னை மாதிரி” ஆட்கள் ஸ்மோக் பண்ண ஆரம்பிக்கணும்...! அப்போதானே நிறுத்த முடியும்... ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. கவிக்காவுக்கு...
    கவிதை மாறிப்போச்சு டும்..டும்..டும்...
    பெண்ணை மறந்தாச்சு டும்...டும்..டும்...
    சிகரெட் தூக்கியாச்சு டும்...டும்...டும்...

    என்னாது விரலுக்குள் சிகரெட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):).. அடிதான் வாங்குவீங்க... கவிதையோடு நிறுத்திடுங்க.. ஓக்கை:)

    ReplyDelete
  10. சரி..சரி... கவிதைக்கு வருவோம்.... சூப்பர்...

    ஏற்கனவே 6ம் விரலாக சிகரெட் என ஒரு கவிதை படித்திருக்கிறேன் எங்கோ, ஆனா அப்படியிருந்தும், இங்கு படிக்கும்போது... அது காதலாகத்தான் இருக்கும் எனப் படித்து வந்து முடிவில் ஏமாந்திட்டேன்... ஏனெனில் நீங்க எப்பவும் காதல் கவிதைதானே வடிப்பீங்க... அதுதான் பழக்கதோஷம்... கீப் இட் அப்.. வெல் டன்.

    ReplyDelete
  11. @athira: ஹாஹா நீங்கதானே போன கவிதையில் சொன்னீங்க எப்போதுமே பெண்ணை பற்றி எழுதுறேன்னு... அதான் வேற என்ன எழுதலாம்னு யோசிச்சேன்...! மண்டைல ஒண்ணும் வரல...! அதான் பல ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதினதை எடுத்து போட்டுட்டேன்...! :) இதுலதான் பொண்ணே வரலையே...! :)

    ஹ்ம்ம்ம் எப்போது காதல் கவிதை எழுதுறேன்னா, எனக்கு அது பற்றி யோசிச்சா மட்டும்தான் கவிதையே வருது...! :(

    சிகரெட் மட்டுமல்ல... எல்லாவற்றையும் கவிதையோடு நிறுத்தி விடுபவன் நான்...! அதுக்கு மேல எதுவும் இல்லை...! :D

    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  12. வளரும் போது எனக்கு அந்த வாசம் பிடிக்கும்...புகைப்பவர்களையும் பிடிக்கும்...
    வளந்த பின் நேர்மாறாய்ப்போனது...
    அறியாமை + கவர்ச்சி + நட்பு + ரெபெல் எல்லாம் சேர்த்து தான் புகை உதயமோ...
    அடிமையாய் கவிதையை நிறுத்தியது அருமை...அது தான் அதிகம் பேச வைக்கும்..
    நல்ல படைப்பு அனீஸ்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. நான் காதல் கவிதைன்னு நெனச்சு தான் படிச்சேன். பாதி படிக்கற வர காதல் கவிதைன்னு தான் தோனுச்சு .. படிக்க படிக்க தான் சிகரெட் பத்தி னே தெரிஞ்சிச்சு

    ReplyDelete
  14. @ரெவெரி: எனக்கு கூட அப்படித்தான். சிறு வயதில் அந்த வாசம் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை. இப்போ சிகரெட் வாசம் வந்தாலே கடுப்பாகுறேன். பொது இடங்களில் இருக்கும்போது சிலர் அருகில் உட்கார்ந்து ஊதிதள்ளுவார்கள். அவர்களிடம் தள்ளி உட்கார்ந்து தம் அடிங்க என சொல்லபோய் சில நேரங்களில் அது வாய்தகராறில் கூட முடிந்ததுண்டு...

    தம் அடிப்பதில் ஒரு கவர்ச்சி இருப்பதாக நினைத்துதான் நிறையபேர் அடிக்குராங்க...!

    ஹ்ம்ம்ம் வந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பா...! :)

    ReplyDelete
  15. @kavitha: முதல்லயே நான் சிகரெட் பற்றி எழுதுறேன் தெரிஞ்சா கவிதை படிக்குற சுவாரசியமே போயிடும் ;) அதனால தான் படம் கூட புரியாத மாதிரி போட்டேன்...!

    ஹ்ம்ம்ம் இனிமே எல்லாமே காதல் கவிதைனு நினைச்சு படிக்காதீங்க... அப்பப்போ இது மாதிரி கவிதை கூட போடுவேன் :)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  16. என்னாது கவிதைக்கு மேல எதுவும் இல்லையா? ஹையோ ஹையோ... கவிதைக்கு மேலதானே காதலி இருக்கிறா கவிக்கா...:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

    ReplyDelete
  17. @athira: இல்லீங்க.. கவிதைக்கு உள்ள மட்டும்தான் காதலி இருக்கா.. இப்போ கவிதைக்கு வெளியே, மேலே, கீழே இப்படி எங்கும் காதலி இல்லை... ;) :R:R

    நன்றி...!

    ReplyDelete
  18. காதலி கவிதைக்கு உள்ளே....
    கவிக்கா கவிதைக்கு வெளியே....

    ஹையோ இதைப்போய் ஆரிடம் நான் சொல்லுவேன்..:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A.:A:A:A

    ReplyDelete
  19. @athira: அதுசரி காதலி காதலினா, ஆருடைய “காதலி” கவிதைக்கு உள்ள இருக்குறானு சொல்றீங்க..? :R:R

    நன்றி !

    ReplyDelete
  20. அப்போ அது கவிக்காட காதலி இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:A:A:A:A:A:A:A:A

    ReplyDelete
  21. @athira: சே சே “அது” என்னோட காதலி இல்ல...! “இது” வேற... :T:T:T:T:T

    ReplyDelete
  22. anish enakkup puriyala .... enna solluringa...ean unga college friends romba pudikkum ....enna kaaranam ...sollungalaen ..

    ReplyDelete
  23. @kalai: அதான் சொல்லிட்டேனே 1% பேருக்கு தான் புரியும்னு... & நான் சொல்லி புரிய வைக்குற அளவுக்கு அது பெரிய காரணமும் அல்ல...!
    வருகைக்கும் , கருத்துக்கும் மீண்டும் நன்றி...! :)

    ReplyDelete
  24. hmmm vendam

    ReplyDelete
  25. @anishka nathan: என்ன வேண்டாம்? கவிதையே எழுத வேண்டாமா?

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

    ReplyDelete