2 Sept 2011

அவளின் இரயில் பயணத்தில்...


அப்பொழுதுதான்
இரவு மணி
இரண்டை தாண்டியிருக்கும்...!

என் கனவுலகம்
வெற்றிடங்களால்
வெறிச்சோடி கிடக்க,
ஆழ்ந்த தூக்கத்தில் நான்...!

என் செல்போனோ
மெல்ல சிணுங்கும் சத்தம்...!

சத்தம் வந்த
இடத்தை நோக்கி
என் கைகள் தேட,
கண்கள் மூடிய தூக்கத்தில்
இன்னும் நான்...

செல்போனை
காதோடு அணைத்தபடி,
உளறல்களின்
ஊமை பாஷையில்
ஹலோ சொன்னேன் நான்...!

அங்கிருந்தும் அதே ஹலோ...!
அது அவளின் குரல்...!!
அவளென்று தெரிந்த
அடுத்த நொடியே
தூக்கம் கலைந்தது எனக்கு...!

காற்றின்
கதறல் சத்தத்துடன்,
தண்டவாள இரயிலின்
தடதட சத்தம்
பெரிதாய் கேட்டது...!

இரண்டு நாட்களுக்கு முன் - அவள்
இரயில் பயணம் பற்றி சொன்னது
இப்போது எனக்கு ஞாபகம் வந்தது...!

இரயிலின்
இரைச்சல்களுக்கிடையில்
அவளின் குரல்
மெலிதாய் கேட்டது...!

இரயில் நிலையம் முதல்,
இரவு நேர இரயில் பயணம் வரை
எதையும் விடவில்லை அவள்...!
எல்லாவற்றை பற்றியும் பேசினாள்...!!

சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...!
செல்போன் வழியே
சட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...!

என்னாச்சு என்ற எனக்கு - ஒரு
சின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே
பதிலாய் கிடைத்தது...!

நல்லா தூங்கு என சொல்லி
போன் வைத்தாள் அவள்...!

சத்தம் மொத்தமாய்
நிசப்தமானது இப்போது...!
என் இதயம் மட்டும்
இடி போல் சத்தம் துடித்தது...!!

மொட்டுகளாய் - என்
குட்டி நெஞ்சில் - நான்
நட்டு வைத்திருந்த காதல்,
பூவாய் முட்டி விரிய தொடங்கியது...!

அன்றிரவு - என்
நினைவுகள் முழுவதும்,
அவளையும்,
அவள் பயணித்துக்கொண்டிருக்கும்
இரயிலையும் சுற்றி வந்தது...!

எனக்கும் அவளுடன் சேர்ந்து
பயணிக்க வேண்டும் போலிருந்தது...!
நான் மரணிக்கும் வரை,
அவளின் கைகளை கோர்த்தபடியே
ஒரு காதல் பயணம்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

10 comments:

  1. very nice anish...
    Kalakureenga...!

    ReplyDelete
  2. அருமையான கவிதை!

    ReplyDelete
  3. @Kaavya: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  4. @ஸ்ரீதர்: மிக்க நன்றி நண்பரே :)

    ReplyDelete
  5. CELL IS VERY USEFUL.... CELL ILLIYANA ENNA AAYIRKUM??????

    ReplyDelete
  6. இது நல்லா இருக்கே ;)

    ReplyDelete
  7. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. @Monika: ரொம்ப நன்றி

    ReplyDelete
  9. super boss...kalakkuringa ....
    good

    ReplyDelete
  10. @Anonymous: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete