சொர்க்கம் கண்முன்னே...
வானத்தின் வாசற்கதவுகள்
என்னை வரவேற்க
திறந்திருந்தன...!
கடவுள்
கண்ணயராமல்
கடமை செய்துகொண்டிருந்தான்...!
கோடி மின்னல்
கூடியதுபோல் ஒளி...!
ஆக்ஸிஜனோ
அத்தராய் கமகமத்தது...!
எமனை தேடிப்பார்த்தேன்...!
எங்கேயும் காணவில்லை...!!
எங்கேயோ கேட்ட கதை பொய்யானது...!!!
தண்ணீரில் முகம் பார்த்தேன்...!
தங்கத்தில் கால் பதித்தேன்...!!
வான தேவதைகளோ
அழகிகளாய்
அணிவகுத்து நின்றனர்...!!
பூமி எங்கோ நின்று
சுழன்று கொண்டிருந்தது...!
சொர்க்கத்தின் அழகு
உண்மையிலே என்னை
சொக்க வைத்தது...!
வானத்தை விட்டு
வீடு திரும்ப
விருப்பமில்லை...!
திடீரென
ஏதோ ஒரு சத்தம்...!
சொர்க்கத்தின் கோயில் மணியா?
யோசித்துக் கொண்டிருக்கும்போதே
ஐந்துமணி அலாரம்
அலறியடித்துக்கொண்டிருந்தது...!
நான் அலறியடித்து எழுந்தேன்...!
தூக்கத்தைவிட்டு...
----அனீஷ் ஜெ...
சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது தங்கள் கவிதை..
ReplyDeletenice
ReplyDeleteஅடடா.... என் சொர்க்கத்தை ஒளிச்சிருந்து படிச்சதால இப்பூடிக் கனவு வந்திருக்கு கவிக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஒளிக்காமல் படிச்சிருந்தால்... சொர்க்கத்துக்கு போயிருக்கலாம்... இல்ல இல்ல.. சொர்க்கத்தை அனுபவித்திருக்கலாம் எனச் சொன்னேனாக்கும்.
ReplyDeleteஅதுசரி சொர்க்கத்தில தங்கம்தான் தெரிஞ்சுதோ? 2 தேவதைகளின் அணிவகுப்பு மட்டும்தானோ?:)... சரி சரி வாணாம் விட்டிடுவோம்... இதெல்லாம் பப்ளிக்கில எதுக்கு..:))).
ReplyDeleteகவிதை எண்டாலும் பொய் சொல்லப்பூடாது.... அது 5 மணி அலாரமா? இல்ல அம்மாவின் ஐஸ் வோட்டரா?:))) என்பதை தெளிவாச் சொல்லவேணும்:)).
ஓக்கை மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).
அநியாயத்திற்கு அலாரம் மணி அடிச்சிடுச்சே
ReplyDeletenice
ReplyDeletePadathula kaatura maadriye Sorgatha describe pannirukeengaley... konjam differenta pannirukalam nu nan feel panren, sorry if its wrong... neenga eppavumey differenta eluthurathunala, ithu romba usuala irunthuchu Anish...
ReplyDeleteBut anyways, Kalakureenga...!
kanvithayileye sorgathai kandeero. arumai anish. aanal enudaiya sorgam ungal kavithai varigalum neengalum dhan,....
ReplyDeleteகவிதையும் சொர்க்கத்தை போல அழகு :C
ReplyDelete@முனைவர் இரா.குணசீலன்: மிக்க நன்றி....! வருகைக்கும், கருத்துக்கும்... :)
ReplyDelete@விக்கியுலகம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
ReplyDelete@athira: 2 தேவதைகள் இல்ல.. நிறைய இருந்தாங்க ;)
ReplyDeleteஹ்ம்ம்ம் அட ஒளிஞ்சிருந்து படிக்குறதுக்கு உங்க சொர்க்கத்தை என்ன புத்தகத்திலயா பூட்டி வச்சிருக்கீங்க? =)) =))
5 மணி அலாரமா ஐஸ் வாட்டராங்குறதை கூட பப்ளிக்கில் பேசப்பிடாதுதுதுது... :A:A
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
@அம்பலத்தார்: அதானே... ;);) மிக்க நன்றி....! வருகைக்கும், கருத்துக்கும்... :)
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
ReplyDelete@Kaavya: இது நான் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை...! அப்பொழுது different'ஆ தான் இருந்திச்சுனு நினைக்கிறேன்...! இப்போ லைட்டா மொக்கை ஆயிடிச்சு...! கண்டுக்காதீங்க ;);)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
@shamilipal: கவிதையில் சொர்க்கம் காணவில்லை...! சொர்க்கம் கண்டதால் கவிதை வந்தது... ;);) நீங்களும் சொர்க்கம் காண வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
@Monika: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :)
ReplyDeleteசொர்க்கம் கண்டது போல் இருந்தது.
ReplyDeleteஅழகான கவிதை வரிகள்
@kavitha: ரொம்ப நன்றி...! வருகைக்கும் கருத்துக்கும்...!! :)
ReplyDelete