24 Feb 2017

அவளும்... அந்த மலரும்...


பெரும் இரவில் பெய்த
பனித்துளி மழையில்
பாதி நனைந்திருந்தது
அதிகாலை பூத்த
அழகான அந்த மலர்...!

நீண்ட இரவு விடிந்ததும்,
நீ வந்து தொட்டுச்சென்றாய்
முற்றத்தின் ஓரத்தில்
முளைத்து நின்ற அந்த மலரை...

உன் விரல் பட்டுச்சென்றபின்
மலரிதழ்களில் மிச்சமிருந்த
பனிநீர் துளிகளெல்லாம்
வண்டுகள் வந்துண்ணும்
தேன்துளிகளாயிருந்தது...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. என்ன கவிக்கா? நீண்ட இடைவெளிக்குப் பின் “அந்த மலரோடு” வந்திருக்கிறீங்க... அந்த மலர் என ஒருமையில் சொல்லிவிட்டு.. பலமலர்கள் படம் போட்டால்ல்.. இதற்குள் எப்படித்தான் தேடிக் கண்டு பிடிப்பது அந்த மலரை?:) இது ஞாயமா?:)..

    ReplyDelete
  2. Very Nice innum athigamana kavithaigalai ungalidam method park ren

    ReplyDelete
  3. Enaku one side love kavithai to her semma kavithai vennum impressiveva....

    ReplyDelete
  4. Malargal mattume anaivarathu kangalukkum therikirathu Aanalum Engalai ponraaa Vergallllll??????

    ReplyDelete
  5. கவிதை அருமை

    ReplyDelete
  6. Very nice line ningalum than

    ReplyDelete