
மண்ணாய் உலர்ந்த மனதில்
விதையாய் விழுகிறது...!
உன் நினவுகள்...!
நீர் விடாமலே
வேர் விட்டு மெல்ல
முளைக்க முயற்சிக்கிறது...!
களையெனெ நினைத்து
களைய நினைத்தாலும்,
இரும்பில் பட்ட காந்தமாய்
இறுகி பற்றியே இழுக்கிறது...!
முளை கிள்ளியே
முறிக்க முயற்சித்தாலும்,
கிளை தள்ளி மீண்டும்
கிடுகிடுவென தளிர்க்கிறது...!
அரும்பாக ஆரம்பித்து
மொட்டாக இதழ் விட்டு
மலராக மலர்கிறது அது...!
உணர்ச்சியென்னும் பட்டாம்பூச்சிகள்
உட்கார்ந்து மலரில் கொஞ்சம்
இதழ்களை பிரித்து
இரைதேன் தேடுகிறது...!
பட்டாம்பூச்சிகளே...!
பறந்துசென்றுவிடுங்கள்...!!
இந்த மலர்களில் சுரக்கும் தேன்களில்
இனிப்பு சுவையில்லை...!
கடலின் உப்பு சுவைக்கும்
கண்ணீரின் சுவை மட்டுமே...!!
----அனீஷ் ஜெ...
Written By : Anish J.
Requested By : Meethu.
Send Your Comments on Whatsapp. Click Here
பட்டாம்பூச்சி எங்கின வந்திச்சு? இனிப்பு சுவை இங்கின இல்லை ஓடு என விரட்டுறீங்க கர்ர்:) உங்களுக்கும் ஓவர் நினைப்புப்போல:)
ReplyDeleteஎதை பட்டாம்பூச்சினு கவிதையிலையே சொல்லிருக்கனே. இப்போ நாந்தான் கர்ர்ர்ர் சொல்லனும். :-)
DeleteTopic can be ninaivugal
ReplyDelete