வெள்ளை மேகங்களை
வெறுங்கையால் பிளந்தேன்...!
வீட்டு முற்றத்தின் நிலத்தடியில்
விலை மதிப்பில்லா புதையல் எடுத்தேன்...!
தொலைபேசியில் கோபமூட்டியவனை
தொலைவில் இருந்தே அடித்தேன்...!
இன்று கண்ட அழகி ஒருத்தியை
இரவில் ஒருமுறை புணர்ந்தேன்...!
இரு நிமிட நேரத்தில்
இருபது தேசங்கள் பறந்தேன்...!
சச்சினின் சாதனைகளனைத்தையும்
சத்தமில்லாமல் உடைத்தேன்...!
தவறுகளுக்கு இங்கு
தண்டனைகளில்லை...!
கைகட்டி நிற்கும்
கட்டுப்பாடுகளில்லை...!
எத்தனை சுதந்திரமானவைகள்...!
எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்
என் கற்பனைகள்...
----அனீஷ் ஜெ...
”கையிற்கு எட்டாத கனியானாலும், நினைவுக்கு எட்டாமல் போய் விடுமா”.. என்ற பொன்மொழியை நினைக்க வைத்தது கவிதை.
ReplyDeleteநன்றி
Delete